_*பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள் 2021-2022-ஆம் கல்வியாண்டு முதலாமாண்டு பட்டயப் படிப்பு மாணாக்கர் சேர்க்கை - 9-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மேற்கொள்ள அனுமதி - அரசாணை (டி) எண். 152, நாள்: 25.06.2021!!!!*_ - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Wednesday, November 17, 2021

_*பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள் 2021-2022-ஆம் கல்வியாண்டு முதலாமாண்டு பட்டயப் படிப்பு மாணாக்கர் சேர்க்கை - 9-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மேற்கொள்ள அனுமதி - அரசாணை (டி) எண். 152, நாள்: 25.06.2021!!!!*_

_*பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள் 2021-2022-ஆம் கல்வியாண்டு முதலாமாண்டு பட்டயப் படிப்பு மாணாக்கர் சேர்க்கை - 9-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மேற்கொள்ள அனுமதி - அரசாணை (டி) எண். 152, நாள்: 25.06.2021!!!!*_


மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், 2021-2022-ஆம் கல்வியாண்டில் Covid-19 பெருந்தொற்றினை 'கருத்தில் கொண்டு அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் மாணாக்கர் சேர்க்கை பதிவை' தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் இணைய தளம் வாயிலாக மேற்கொள்ள அனுமதி வழங்கி. மேலே ஒன்றாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் ஆணை பெறப்பட்டதாகவும், 10-ஆம் வகுப்பு கல்வி தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் முதலாமாண்டு பட்டயப்படிப்பு மாணாக்கர் சேர்க்கை செய்யப்படுவது நடைமுறையில் இருந்து வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், AICTE 2021-2022-ஆம் ஆண்டு வழிகாட்டு நெறிமுறை Appendix 1 உட்பிரிவு 1.1-ல் பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பாக கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் குறிப்பிட்டுள்ளார்:

"Diploma programme in Engineering and Technology - Duration 3 or 4 Years - Eligibility is passed 10th std /SSLC Examination (obtained at least 35% Marks in the qualifying examination)"

2. மேலும் 12.06.2021 ‘அன்று மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் அவர்கள், உயர்கல்வித் துறை செயலாளர் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்கக அலகு அலுவலர்களுடன் கலந்து கொண்ட கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், இதுவரையில், பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் முதலாமாண்டு பட்டயப்படிப்பில் சேர்வதற்கான கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி என்றிருந்த போதிலும், 2020-21-ஆம் கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு இறுதி தேர்வு நடத்துவது Covid -19 காரணமாக கைவிடப்பட்டதை தொடர்ந்து, 9-ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் பட்டயப் படிப்பு மாணாக்கர் சேர்க்கை செய்து கொள்ளலாம் என்று தீர்மானிக்கப்பட்டதாக மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில் தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் தெரிவித்துள்ளார்.





இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..

For Whatsapp Group

For Telegram Group

No comments:

Post a Comment