*_ஜீரோ கலந்தாய்வு பி.இ.ஓ.,க்களுக்கு எப்போது சீனியர்கள் எதிர்பார்ப்பு!!!_* - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Saturday, November 6, 2021

*_ஜீரோ கலந்தாய்வு பி.இ.ஓ.,க்களுக்கு எப்போது சீனியர்கள் எதிர்பார்ப்பு!!!_*

*_ஜீரோ கலந்தாய்வு பி.இ.ஓ.,க்களுக்கு எப்போது சீனியர்கள் எதிர்பார்ப்பு!!!_*

தினமலர் செய்தி
தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு (டி.இ.ஓ.,க்கள்) நடந்தது போல் தொடக்க பள்ளிகளின் ஆய்வு அலுவலர்களான வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் (பி.இ.ஓ.,க்கள்) ஜீரோ கலந்தாய்வு நடத்த வேண்டும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.



மாநிலத்தில் முதன்முறையாக 127 டி.இ.ஓ.,க் களுக்கு கல்வித்துறை சார்பில் அனைத்து இடங்களும் காலியாக அறிவிக்கப்பட்டு (ஜீரோ கவுன்சிலிங்) மாநில சீனியாரிட்டி அடிப்படையில் மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது.இதுவரை அரசியல், அதிகாரிகளின் 'சிபாரிசு' அடிப்படையில் விரும்பிய மாவட்டங்களுக்கு மாற்றம் பெற்று வந்தனர். 





இதனால் தென் மாவட்டங்களை சேர்ந்த பலர் வட மாவட்டங்களிலேயே பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பணியாற்ற வேண்டியிருந்தது. தற்போது நடந்த ஜீரோ கலந்தாய்வில் இதற்கு கல்வித்துறை முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இதனால் சொந்த மாவட்டங்களை தேர்வு செய்யக் கூடாது என்ற நிபந்தனை இருந்தும் அருகில் உள்ள மாவட்டங்களை சீனியர் அதிகாரிகள் தேர்வு செய்தனர்.



இதுபோல் மாநிலத்தில் தொடக்க பள்ளிகள் ஆய்வு அதிகாரிகளான 836 பி.இ.ஓ.,க்கள் பல ஆண்டுகளாக யூனியன்களுக்குள் மாற்றம் பெற்று ஒரே மாவட்டத்தில் பணியாற்றுகின்றனர். இங்கும் 'சிபாரிசு அரசியல்' தான் கோலோச்சுகிறது. எனவே தீபாவளி விடுமுறைக்கு பின் பி.இ.ஓ.,க்களுக்கும் விரைவில் ஜீரோ கலந்தாய்வு நடத்த கல்வி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல ஆண்டுகளாக ஒரே மாவட்டத்தில் பணியாற்றும் சீனியர் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்


இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..

For Whatsapp Group

For Telegram Group

No comments:

Post a Comment