_*தமிழ்நாடு அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்யும் பொருட்டு, தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தாளினை அறிமுகம் செய்தல் ஆணைகள் - அரசாணை (நிலை) எண்.133நாள்.01.12.2021!!!*_
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், மாண்புமிகு அமைச்சர் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை) அவர்களால் 13.092021 அன்று நிகழ்த்தப்பட்ட 2021-2022-ஆம் ஆண்டிற்கான மனிதவள மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கை தொடர்பான உரையின் போது, பின்வரும் அறிவிப்பு வெளியிடப்பட்டது
“தமிழக அரசுத் துறைகளில் உள்ள பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள பணியிடங்கள் அனைத்திலும் தமிழக இளைஞர்களை 100 சதவீதம் நியமனம் செய்யும் பொருட்டு, தேர்வு முகமைகளால் நடத்தப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தாள் தகுதித் தேர்வாக கட்டாயமாக்கப்படும்

இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..
No comments:
Post a Comment