JOB ANNOUNCEMENT: திருவள்ளூர் மாவட்டம் TNCSC - 2021 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை வாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி தேதி :22.09.2021 - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Saturday, September 11, 2021

JOB ANNOUNCEMENT: திருவள்ளூர் மாவட்டம் TNCSC - 2021 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை வாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி தேதி :22.09.2021

JOB ANNOUNCEMENT: திருவள்ளூர் மாவட்டம் TNCSC - 2021 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை வாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி தேதி :22.09.2021



தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், திருவள்ளூர் மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவகால பணிக்கு பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் பணியிடங்களுக்கு கீழ்கண்ட தகுதிகளின் அடிப்படையில் ஆண்களிடம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேலை வகை: தமிழக அரசு

விண்ணப்பிக்கும் முறை : தபால்

பணியிட விபரங்கள்:

1. பட்டியல் எழுத்தர் - 36 பதவிகள்

2.உதவுபவர் 31 பதவிகள் -

3.காவலர்31 பதவிகள்

மொத்த பணியிடங்கள்: 98 பதவிகள்

கல்வித் தகுதி:

1.பட்டியல் எழுத்தர்-பி.எஸ்.சி. (அறிவியல்)

2.உதவுபவர் - +2 (HSC) தேர்ச்சி

3.காவலர் - 8 ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு:

01-07-2021 ன் படி குறைந்தப்பட்சம் 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும். அதிகப்பட்சம் 30 வயதுவரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதிகப்பட்சம் SC. SC(A), ST பிரிவினர் 35 வயது வரையும், MBC/DC, BC and BC(M) பிரிவினர் 32 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.

சம்பள விகிதம்:

1. பட்டியல் எழுத்தர்

தமிழக அரசின் அகவிலைப்படி மாத ஊதியமாக ரூ.6459/- வழங்கப்படும்

2.உதவுபவர்

3.காவலர்

மேற்கண்ட பணியிடங்களுக்கு தமிழக அரசின் அகவிலைப்படி மாத ஊதியமாக ரூ.6408/- வழங்கப்படும்

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ் குறிப்பிட்டுள்ள முகவரியில் உள்ள மண்டல அலுவலகத்தில் அலுவலக வேலை நாட்களில் சென்று விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம். 

விண்ணப்பத்துடன் தேவையான அனைத்து நகல் சான்றிதழ்களையும் சுய ஒப்பமிட்டு இணைத்து இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கு முன்பாக கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியான நபர் தேர்வுசெய்யப்படுவர். தேர்வு செய்யப்பட்டவரின் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு பின் பணி நியமனம் செய்யப்படுவர்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அதிகாரப்பூர்வ இணையத்தளம் 👇👇👇👇


விண்ணப்பிக்க கடைசி நாள்
22.09.2021

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:

மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், மண்டல அலுவலகம் 46, வள்ளலார் தெரு, பெரியகுப்பம், திருவள்ளூர் 602001.

WhatsApp group link... Join

Telegram group link... Join


No comments:

Post a Comment