JOB ANNOUNCEMENT: சென்னை பெருநகர போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.10.2021 - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Sunday, September 12, 2021

JOB ANNOUNCEMENT: சென்னை பெருநகர போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.10.2021

JOB ANNOUNCEMENT: சென்னை பெருநகர போக்குவரத்து கழகத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.10.2021



சென்னை பெருநகர போக்குவரத்து கழகம் சென்னை லிமிடெட் கீழ்க்காணும் விவரப்படி காலியாக உள்ள பணியிடங்களை பயிற்சி பதவியின் மூலம் தொகுப்பு ஊதிய அடிப்படையில் நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்பொழுது வெளியிட்டுள்ளது. கீழ்க்காணும் விவரப்படி தற்காலிகமாக (25 மாதங்கள்) பணிபுரிய தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

வேலை வகை: தமிழக அரசு

விண்ணப்பிக்கும் முறை :  
ஆன்லைன் மூலம்

பணியிட விபரங்கள்:

1. டீசல் மெக்கானிக் (Mechanic Diesel)

மொத்த பணியிடங்கள்: 325 பதவிகள்

கல்வித் தகுதி:

கணிதம் மற்றும் அறிவியல் பாடப் பிரிவில் படித்து 10 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

14 வயதிற்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் 

சம்பள விகிதம்:

அரசின் பயிற்சிப் பதவிக்கான விதிமுறைப்படி மாத ஊதியமாக குறைந்தப்பட்சம் ரூ. 6,000/ அதிகப்பட்சம் ரூ. 9,257/- வரை வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப மற்றும் தேர்வுக்கட்டணம் எதுவும் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் மேற்கண்ட பயிற்சிப் பதவிக்கு விண்ணப்பிக்கும் முன்பு முதலில் (NSDC இன் அதிகாரப்பூர்வ
வலைத்தளம்) 
https://apprenticeshipindia.org என்ற இணையத்தளத்தில் தங்களை பதிவு செய்ய வேண்டும் இது கட்டாயமாகும். 

மேற்கண்ட இணையதளத்தில்
வெற்றிகரமாக நீங்கள் பதிவு செய்தப்பின் உங்களுக்கு ஒரு பதிவு 6T600T (Enrollment Number) வழங்கப்படும். இந்த பதிவு எண்ணுடன் இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.

தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடி அல்லது பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்:

08.10.2021

அதிகாரப்பூர்வ இணையதளத்தில் முதலில் பதிவுசெய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்👇👇👇👇


WhatsApp group link... Join

Telegram group link... Join


No comments:

Post a Comment