JOB ANNOUNCEMENT: தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் (TNERC) - வேலைவாய்ப்புகள்- Tamilnadu TNERC Jobs Notification 2021
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
சென்னையில் உள்ள தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட தகுதி வாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு அறிவிப்பு :
சம்பளம்:ரூ.225000
வேலை வகை : தமிழக அரசு
விண்ணப்பிக்கும் முறை : தபால் மூலம்
பணியிட விபரங்கள்:
1.இயக்குனருக்கு தனிப்பட்ட
உதவியாளர் (பொறியியல்)
2.உதவியாளர் (சட்டம்)
3. அலுவலக உதவியாளர்
கல்வித்.தகுதி:
1.இயக்குனருக்கு தனிப்பட்ட உதவியாளர் (பொறியியல்)
i) ஏதேனும் ஒரு பிரிவில் பட்டதாரி. பொறியியல் பட்டதாரிகள் விரும்பப்படுகிறார்கள். சீனியர் கிரேடு மூலம் ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) கணினியில் செயல்பாட்டில் 3 வருட தொழில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2.உதவியாளர் (சட்டம்)
i) சட்டத்தில் பட்டதாரி. ஆங்கில டைப்ரைட்டிங் சீனியர் தரத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) கணினி செயல்பாட்டுடன் கூடிய நீதிமன்ற நடவடிக்கைகளில் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
3. அலுவலக உதவியாளர்
i) Commerce ல் முதுகலை பட்டம்/ ICWA / CA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) ஆங்கில டைப்ரைட்டிங் சீனியர் தரத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
(iii) ஜிஎஸ்டி படிப்பில் சான்றிதழ் விரும்பப்படுகிறது.
வயது வரம்பு:
01.01.2021 -ன் படி மேற்கண்ட அனைத்துப் பணியிடங்களுக்கும், விண்ணப்பதாரர்கள் 25 வயது நிறைவு செய்து இருக்க வேண்டும்.
சம்பள விகிதம்:
1.இயக்குனருக்கு தனிப்பட்ட உதவியாளர் (பொறியியல்)
ஒப்பந்த சம்பளம் மாதத்திற்கு ரூ. 47,000/
2.உதவியாளர் (சட்டம்)
3. அலுவலக உதவியாளர்
மேற்கண்ட இரு பதவிகளுக்கும் ஒப்பந்த சம்பளம் மாதத்திற்கு ரூ. 26,000/
விண்ணப்ப கட்டணம்:
மேற்குறிப்பிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க எவ்வித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பிக்கும் அனைவரும் கல்வி தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவத்தின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத் தேர்விற்கான இடம் மற்றும் நாள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும்.
அனைத்து அசல் சான்றிதழ்கள்/ கல்வித் தகுதிகளின் ஆவணங்கள், அனுபவ சான்றிதழ் அதன் நகல் ஆகியவற்றை நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணியிடங்களுக்கு தேவையான தகுதி மற்றும் அனுபவம் உள்ள விண்ணப்பதாரர்கள் புகைப்படத்துடன் கூடிய சுய விபரங்களுடன் கூடிய பயோடேட்டா மற்றும் தேவையான அனைத்து சான்றிதழ்களின் சுயசான்றொப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து கீழ் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு தபால் மூலமாக குறிப்பிட்டுள்ள கடைசி நாளுக்கும் முன்பாக கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்:
30.09.2021
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
The Secretary, Tamil Nadu Electricity Regulatory Commission, 4th Floor, SIDCO Corporate Office Building, Thiru.vi.ka Industrial Estate, Guindy, Chennai 600 032
'TNERC அரசு இணையதளத்தை காண இங்கே கிளிக் செய்யுங்கள்
இந்த வேலை வாய்ப்பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.09.2021
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
The Secretary, Tamil Nadu Electricity Regulatory Commission, 4th Floor, SIDCO Corporate Office Building, Thiru.vi.ka Industrial Estate, Guindy, Chennai 600 032.
Join Telegram group... Click here

No comments:
Post a Comment