தமிழ்நாடு அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு -TamilNadu Post office Agent Recruitment 2021 - விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.09.2021
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
கோவை கோட்டத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு வணிகம் செய்ய, நேரடி முகவர்களுக்கான பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலை வகை : முகவர் பணி
விண்ணப்பிக்கும் முறை : நேர்காணல்
பணியிட விபரங்கள்:
1. நேரடி முகவர் மற்றும் கள அதிகாரி L1600f (Direct Agent and Field Officer work)
கல்வித் தகுதி:
10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்று மத்திய, மாநில அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
அதிகப்பட்சம் 50 வயதிற்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்ப கட்டணம்:
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்க எவ்வித விண்ணப்பக் கட்டணமும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான நபர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் வல்லுநர்கள் கொண்ட தேர்வு குழு மூலம் நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விருப்பம் உள்ள நபர்கள் மட்டும் உங்களின் அருகில் உள்ள தபால் நிலையங்களில் விண்ணப்பத்தினை நேரடியாக பெற்றுக் கொள்ளலாம். தகுதியுடைய நபர்கள் புகைப்படம்-2, ஆதார் கார்டு நகல்- 1, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான சான்றிதழ் நகல்- 1, பான் கார்டு நகல்-1 ஆகிய ஆவணங்களுடன் கீழ் குறிப்பிட்டுள்ள முகவரியில் நடைபெறும் நேர்காணலின் போது சமர்ப்பிக்க வேண்டும்.
கோவை மாவட்டத்தினர் மட்டும் விண்ணப்பிக்கவும்.
நேர்காணல் நடைபெறும் நாள்: 17.09.2021
நேரம்: காலை 10 மணிக்குள்
நேர்காணல் நடைபெறும் இடம்:
கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலம், கோவை தலைமை தபால் நிலையம், கூட்செட் ரோடு, கோயம்பத்தூர்.
உதவிக்கு அழைக்க:
0422-2558541, 94455 18811 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..
எங்களது வலைதளம்

No comments:
Post a Comment