*பவானிசாகர் அரசு அலுவலர் சுருக்கப்பட்ட அடிப்படை பயிற்சியை மாவட்டம் தோறும் வழங்குதல் அரசாணை (நிலை) எண்.117, நாள்.25.10.2021 வெளியீடு!!*
சட்டமன்றப் பேரவை விதி எண்.10-ன் கீழ் 07.09.2021 அன்று மாண்புமிகு முதலமைச்சர்அவர்கள் கீழ்காணும் அறிவிப்பினை வெளியிட்டார்.
புதிதாக அரசுப் பணியில் சேரும் அரசுப் பணியாளர்கள் மற்றும் பதவி உயர்வு பெறும் பணியாளர்களுக்குப் பணி தொடர்பான பயிற்சியினை அந்தந்த மாவட்டங்களிலேயே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் பவானிசாகர் சென்று பயிற்சி பெறும் நிலை தவிர்க்கப்பட்டு, தாமதமின்றி அரசு ஊழியர்கள் உரிய காலத்தில் தங்களுக்குரிய தகுதிகாண் பருவம் முடித்தல் மற்றும் பதவி உயர்வு பெறுவது உறுதி செய்யப்படும்:
2 மேலே இரண்டாவதாகப் படிக்கப்பட்ட கடிதத்தில், பயிற்சித் துறைத் தலைவர் அவர்கள் அரசுப் பணியில் பணிவரன்முறை செய்யப்பட்டு, அடிப்படைப் பயிற்சி பெற வேண்டி நிலுவையில் உள்ள அலுவலர்களுக்கு பவானிசாகர் அடிப்படைப் பயிற்சியை அந்தந்த மாவட்டங்களில் அளித்து, பயிற்சி பெறுவதற்கு உள்ள அரசு அலுவலர்களின் நிலுவையினை முற்றிலுமாக குறைப்பதற்கு ஏற்ப மாவட்டந்தோறும் பயிற்சி நடத்துவதற்கான விரிவான விவரங்களையும், அதற்கான செலவினங்களையும் கீழ்கண்டவாறு அளித்துள்ளார்.
No comments:
Post a Comment