நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் 09.12.2021 அன்று வெளியீடு!
நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் 09.12.2021 அன்று வெளியீடு
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் அவர்கள் தலைமையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் சாதாரணத் தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரித்தல், மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்கு அடிப்படை வசதிகள் அமைத்து தருதல் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வுக் கூட்டம் இன்று (01.12.2021) பிற்பகல் காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது.
மாண்பமை உச்சநீதிமன்ற ஆணையின்படி, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி ஆகியவற்றிற்கு சாதாரணத் தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் தயாரித்தல், உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் காணொலிக் காட்சி (Video-Conferencing) வாயிலாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் முனைவர் வெ. பழனிகுமார், இ.ஆ.ப., (ஓய்வு) அவர்கள் தலைமையில் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள் / மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் இன்று (01.12.2021) நடைபெற்றது.
இக்கூட்டத்தில், நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் 09.12.2021 அன்று வெளியிடப்படவுள்ளது, அரசியல் கட்சிகளுக்கு வாக்காளர் பட்டியல் நகல் வழங்குதல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான முதல்நிலை சரிபார்ப்பு, தகவல் பதிவேற்றம் மற்றும் முடிவறிக்கை நிலை, மண்டல அலுவலர்கள் நியமனம், வாக்குப்பதிவு அலுவலர்கள் ஆன்லைன் தகவல் பதிவு செய்தல், முன்னேற்ற அறிக்கை, வாக்குச்சாவடிகளில் செய்யப்பட வேண்டிய அடிப்படை வசதிகளான குடிதண்ணீர், கழிப்பறை வசதி, மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்கு சாய்தள நடைமேடை அமைத்தல் மற்றும் முதியோர்களுக்கு சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்தல் குறித்து பேசப்பட்டது.
இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..
No comments:
Post a Comment