*2021-22ஆம் ஆண்டிற்கான சிறுபான்மையின மாணவ-மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை அறிவிப்பு...!!!* - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Wednesday, September 29, 2021

*2021-22ஆம் ஆண்டிற்கான சிறுபான்மையின மாணவ-மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை அறிவிப்பு...!!!*

2021-22ஆம் ஆண்டிற்கான சிறுபான்மையின மாணவ-மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை அறிவிப்பு...!!!


2021-22ஆம் ஆண்டிற்கான  சிறுபான்மையின மாணவ-மாணவியர்களுக்கு பள்ளிப் படிப்பு, பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான
கல்வி உதவித் தொகை அறிவிப்பு....
 
தமிழ் நாட்டில் இந்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியர், கிறித்துவர், சீக்கியர், புத்தமதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதத்தை சார்ந்த இந்திய / மாநில அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு பள்ளி படிப்பு (1ஆம் வகுப்பு முதல்), பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம்) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை பெறுவதற்கு www.scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை இணையம் (NSP) மூலம் விண்னாப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கல்வி உதவித்தொகை இந்திய அரசின் சிறுபான்மையினர் விவகார அமைச்சகத்தால் நேரடி பயன் பரிமாற்றம் மூலம் மாணவ மாணவியர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். புதிய மற்றும் புதுப்பித்தல் சுல்வி உதவித் தொகை வேண்டி மாணவ மாணவியர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகைக்கு 15.11.2021 வரையிலும், பள்ளி மேற்படிப்பு (ம) தகுதி மற்றும் வருவாய் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு 30.11.2021 வரையிலும் விண்ணப்பிக்கலாம். திட்ட வழிகாட்டி முறைகள், தகுதிகள், விதிமுறைகள் (ம) நிபந்தனைகள், மாணவர் / கல்வி நிலையங்களுக்கான அவ்வப்போது கேட்கப்படும் கேள்விகள் (FAQ), இணையம் செயல்படும் முறை (ம) 2021-22 ஆம் ஆண்டில் இணையத்தில் ஏற்படுத்தப்பட்ட புதிய வசதிகள் ஆகியவைகள் மேற்காணும் இணையத்தில் தரப்பட்டுள்ளன. பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி (ம) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியான படிப்புகளின் விவரங்களை www.minorityaffairs.gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.

இக்கல்வி உதவித் தொகை திட்டத்தில் பங்குபெற தகுதியுள்ள அனைத்து கல்வி நிலையங்களும், கல்வி நிலையங்களின் ஒருங்கிணைப்பு அலுவலர் மற்றும் கல்வி நிலைய தலைவர் ஆகியோர்களின் ஆதார் விவரங்கள் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் சரிபார்க்கப்படவேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


WhatsApp group link... Join

Telegram group link... Join

No comments:

Post a Comment