அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்சவரம்பினை இரண்டு ஆண்டுகள் உயர்த்தி அரசாணை வெளியீடு!! - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Thursday, September 16, 2021

அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்சவரம்பினை இரண்டு ஆண்டுகள் உயர்த்தி அரசாணை வெளியீடு!!

அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்சவரம்பினை இரண்டு ஆண்டுகள் உயர்த்தி அரசாணை வெளியீடு!! 

GO NO : 91 ,Date. : 13.09.2021


தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் , 13.09.2021 அன்று நடைபெற்ற 2021-2022 - ஆம் ஆண்டிற்கான மனிதவள மேலாண்மைத் துறையின் மானியக் கோரிக்கையின் போது , கொரோனா பெருந்தொற்று காரணமாக , பணியாளர் தெரிவு முகமைகளால் நடத்தப்படும் அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் தாமதமானதால் , நேரடி நியமன வயது உச்ச வரம்பு இரண்டு ஆண்டுகள் உயர்த்தப்படும் என மாண்புமிகு அமைச்சர் , நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அவர்களால் அறிவிப்பு வெளியிடப்பட்டது . 

2 மாண்புமிகு அமைச்சர் , நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அவர்களின் மேற்குறிப்பிட்ட அறிவிப்பிற்கிணங்க , பின்வருமாறு ஆணைகள் வெளியிடப்படுகின்றன : i ) அரசுப் பணிகளில் நேரடி நியமனம் மூலம் பணி நியமனம் செய்யப்படுவதற்கான வயது உச்ச வரம்பு , தற்போதுள்ள 30 ஆண்டுகளிலிருந்து 32 ஆண்டுகளாக உயர்த்தப்படுகிறது

GO NO : 91 ,Date. : 13.09.2021 


இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..


No comments:

Post a Comment