பொதுத்தேர்வு வினாத்தாள் முறையில் மாற்றம் இல்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Thursday, September 2, 2021

பொதுத்தேர்வு வினாத்தாள் முறையில் மாற்றம் இல்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

பொதுத்தேர்வு வினாத்தாள் முறையில் மாற்றம் இல்லை - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி



பொதுத்தேர்வு வினாத்தாள் முறையில் மாற்றம் இல்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஹேர்பர்ட் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் திறக்கப்பட்டதை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டப்பேரவை உறுப்பினர் மு க ஸ்டாலின் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர் பின்னர் அவர்கள் வகுப்பறைகள் சென்று மாணவர்களிடம் கலந்துரையாடினர் அப்போது கொரோனா பெருந் தொற்று பாதுகாப்பு உறுதிமொழி மாணவருடன் சேர்த்து எடுத்துக் கொண்டதையும்  மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்ததை செய்தியாளரிடம் அமைச்சர்  கூறினார்.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில் தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன பள்ளி மாணவியுடன் பேசிய போது மாணவர்கள் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாகவும்  தெரிவித்தார். 
இந்த பள்ளி வரலாற்று சிறப்புமிக்க பள்ளியாக உள்ளது இங்கு உள்ள தொன்மை வாய்ந்த கட்டடம் பொதுப்பணித் துறையின் மூலம் புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது அரசு பள்ளிகளை பராமரிப்பு பணிகள் மாவட்ட ஆட்சியர் மூலம் நிதி ஒதுக்க பராமரிக்கவும் அறிவுறுத்தி உள்ளோம் சட்டப்பேரவை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியின் மூலம் அரசு பள்ளிகளில் தூய்மைப்பணி கட்டுமான பணிகள் மேற்கொள்ள முதலமைச்சர் எடுத்துக் கூறியுள்ளார். 

பொதுத் தேர்வு வினாத்தாளில் மாற்றம் இல்லை. 

 பள்ளிகளில் முதல் வாரம் மாணவர்கள் வருகை கண்காணிக்க உள்ளோம்.

மாணவர்கள் மனரீதியான தயார்படுத்தும் வகையில் 45 தினங்கள் புத்துணர்வு வகுப்புகள் மட்டுமே எடுக்க வேண்டும் என  ஆசிரியர்களுக்கு அறிவித்து உள்ளோம். 

பள்ளி கட்டணம் செலுத்தினால் மட்டுமே மாற்று சான்றிதழ் வழங்கப்படும் என பள்ளி நிர்வாகம் தெரிவிப்பது குறித்து உரிய புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். 

வினாத்தாள் முறையில் மாற்றம் இல்லை பொதுத் தேர்வு வினாத்தாளில் மாற்றம் இருக்காது தற்போது இருக்கின்ற நடைமுறையே தொடரும் மாணவர்களுக்கு பாடம் குறைக்கப்பட்டுள்ளன என்றார். 

No comments:

Post a Comment