ஆசிரியர்கள் இறைவனுக்கு சமமானவர்கள்’, ஆசிரியர் தின வாழ்த்துக்கள் – குடியரசுத் தலைவர்! - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Sunday, September 5, 2021

ஆசிரியர்கள் இறைவனுக்கு சமமானவர்கள்’, ஆசிரியர் தின வாழ்த்துக்கள் – குடியரசுத் தலைவர்!

ஆசிரியர்கள் இறைவனுக்கு சமமானவர்கள்’, ஆசிரியர் தின வாழ்த்துக்கள் – குடியரசுத் தலைவர்!

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்பாகப் பணிபுரியும் 389 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

முன்னாள் இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் திங்கள் 5ம் நாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சிறப்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது ஒவ்வோர் ஆண்டும் இவ்விழாவில் வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறும் ஆசிரியர்களுக்கு, ரூ.10,000க்கான காசோலை, வெள்ளிப் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்படுவர். 

அந்த வகையில், 2020-2021ம் கல்வியாண்டில் அனைத்து வகையான பள்ளிகளிலும் சிறப்பாகப் பணிபுரியும் 379 ஆசிரியர்கள், மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தை சார்ந்த 10 ஆசிரியர்கள் என மொத்தம் 389 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாநில நல்லாசிரியர் விருதான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது.

செப்டம்பர் 5ம் தேதியான நாளை இந்தியாவில் ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில், நாட்டில் உள்ள ஆசிரியர்கள் அனைவருக்கும் குடியரசுத் தலைவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். 

அந்த செய்திக் குறிப்பில், ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அனைத்து ஆசிரியர்களுக்கும் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நம் குழந்தைகளின் அறிவாற்றல் மற்றும் ஒழுக்க மேம்பாட்டில் முன்னிலை வகிக்கும் ஆசிரியர்களின் அர்ப்பணிப்பை கௌரவிக்கும் தருணமாக ஆசிரியர் தினம் அமைகிறது.



இந்திய பாரம்பரியத்தில் இறைவனுக்கு சமமாக ஆசிரியர்கள் கருதப்படுகிறார்கள். மேலும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆன்லைன் வழி கல்வி அறிமுகப் படுத்தப்பட்ட போது ஆசிரியர்கள் மிகவும் அரும்பாடு பட்டு மாணவர்களுக்கு பாடங்களை நடத்தினார்கள். வலுவான மற்றும் வளமான நாட்டின் கட்டமைப்பை நோக்கிய ஆசிரியர்களின் உழைப்பை வழங்கி வரும் ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்திற்கு இந்தத் தருணத்தில் நாம் அனைவரும் நமது நன்றியைத் தெரிவிப்போம் என்று தெரிவித்துள்ளார்

இது போன்ற பயனுள்ள தகவல் தொடர்பு கொள்ள👇👇👇

No comments:

Post a Comment