*நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதற்கான மாவட்ட ஆட்சியரின் செயல்முறைகள்...!!! *
அரசாணையில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு மாணவியருக்கான நேரடி வகுப்புகள் அரசின் கொரோனா நிலையான மாணவ நடைமுறைகளைப் பின்பற்றி 0111.2021 முதல் நடத்த அனுமதிக்கப்படும் எனவும் அதற்கான முன்னேற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து பார்வை -2இல் காணும் கடிதத்தில் தொடக்கக் கல்வி நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்து வகை பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்த நெறிமுறைகள் செயல்படுத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்புகளுக்கு 01.11.2021 முதல் பள்ளிகள் திறப்பது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகளான பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகள் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு தூய்மையாக இருத்தல், அனைத்து பள்ளிகளிலும் மின் இணைப்புகள் அனைத்தும் பழுது பார்க்கப்பட்டிருத்தல் முகக் கவசம், கிருமி நாசினி சோப்புகள் மற்றும் பல்ஸ் ஆக்ஸி மீட்டர்கள் இருப்பில் வைத்திருத்தல், கட்டிடங்களின் பாதுகாப்பு பள்ளி வளாகத்தின் தேவையான பகுதிகளில் கொசுமருந்து தெளித்து பள்ளி வளாகம் சுகாதாரமான சூழலில் செயல்படுதல் மழைக்காலங்களில் நீர் கசிவினால் மின் கசிவு ஏதும் ஏற்படாதவாறு பள்ளிகளில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து சார்ந்த துறை அலுவலர்களுடனான கலந்தாலோசனை கூட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2110.2021 அன்று பிற்பகல் 3.00 மணி அளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே அனைத்து அலுவலர்களும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment