*15.10.2021 - உலக கை கழுவும் தினம் கொண்டாடுவதற்கான அறிவுரைகள் மற்றும் உறுதிமொழி - தொடக்கக் கல்வித்துறை!! *
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை சார்பாக உலக கை கழுவும் தினம் 15.10.2021 அன்று மேற்கொள்ளவேண்டிய உறுதி மொழி படிவம் மற்றும் இப்பொருள் சார்பான அறிவுரைகள் அடங்கிய இணைப்புப் படிவம் ஆகியவற்றை உரிய நடவடிக்கைக்காக இத்துடன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் இணைத்தனுப்பப்படுகிறது.
கொண்டாடப்பட்ட அறிக்கையினை 18.10.2021 - க்குள் இவ்வலுவலகம் அனுப்பிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைகளை கழுவுவதினால் ஏற்படும் நன்மைகள்
பணிபுரியும் இடத்தில் அனைத்துப் பணியாளர்களும் ஒழுங்கான முறையில் கை கழுவுவதன் மூலம் எளிதில் தொற்றக்கூடிய வயிற்றுப்போக்கு, காலரா, மஞ்சள் காமாலை, சீதபேதி போன்ற நோய்களை 33% குறைக்க முடியும்.
• உணவகம், தெருவோரம் நடமாடும் உணவகங்களில் பணிபுரிபவர்கள் மற்றும் உணவு உண்பவர்கள் ஒழுங்காக கைகளை கழுவுவதன் மூலம் உணவு மூலம் பரவக்கூடிய டைபாய்டு. வயிற்றுப்போக்கு மற்றும் மஞ்சள் காமாலை போன்ற தொற்றுகளைத் தடுக்க இயலும். • ஒழுங்காகக் கை கழுவுவதன் மூலம் விரல் இடுக்குகள் மற்றும் நகங்களில் கண்ணுக்கு புலப்படாத நோய்களைப் பரப்பக்கூடிய பாக்டீரியாக்களின் ஆயுட் காலத்தை குறைக்க முடியும்.
• ஒழுங்காகக் கைகளை கழுவுவதன் மூலம் அதிகரித்து வரும் ஆண்டிபயாடிக் மருந்து எதிர்ப்புத் தன்மையை பெருவாரியாக குறைக்க முடியும்.
* பகல் நேரங்களில் செயல்படும் குழந்தை பாதுகாப்பு மையங்கள். பள்ளிக்கூடங்கள் உள்ள குழந்தைகள் ஆரோக்கியமாக இருப்பதற்கு தினசரி கைகளை கழுவ வேண்டும்.
மற்றும் வீடுகளில்
தினசரி நமது கைகளால் கண், மூக்கு மற்றும் வாய் ஆகியவற்றை அடிக்கடி தொடும் பொழுது, கைகள் மூலமாக கண், மூக்கு மற்றும் வாய் வழியாக தொற்றக்கூடிய நோய்களை ஒழுங்காக கைகழுவுதன் மூலம் தடுக்க இயலும். குறிப்பாக கோவிட் 19 தொற்று நோயை தடுக்க இயலும்.
No comments:
Post a Comment