2016, 2017 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அரசுப் பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்ட காலங்கள் மற்றும் தற்காலிகப் பணிநீக்கக் காலம் பணிக்காலமாக முறைப்படுத்துதல் அரசாணை வெளியீடு!!!
அரசாணை (நிலை) எண்.113
நாள் 13.10.2021
கடந்த 2016, 2017 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில், சில அரசுப் பணியாளர் மற்றும் ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவ்வேலை நிறுத்தப் போராட்ட காலங்களுக்கு, 'பணிபுரியவில்லை என்றால் ஊதியமில்லை" என்ற கொள்கையின் அடிப்படையில் அவர்களுக்கு ஊதியம் பெற்று வழங்கப்படவில்லை. மேலும், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கைகளும், குற்றவியல் வழக்குகளும் தொடரப்பட்டன.
No comments:
Post a Comment