ஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கு வயது வரம்பை ( AGE LIMIT) உயர்த்தி அரசாணை வெளியீடு!!!
அரசாணை (நிலை) எண்.144,
நாள் 18.10.2021
பள்ளிக் கல்வி - பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு/ தொடக்க/ நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் நேரடி நியமனம் - சிறப்பு விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கு பணி நாடுநர்களுக்கான உச்ச வயது வரம்பினை உயர்த்துதல் - ஆணை வெளியிடப்படுகிறது.
அரசாணைகளில் முறையே தமிழ்நாடு தொடக்கக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள். தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப் பணிகளுக்கான சிறப்பு விதிகள் மற்றும் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணிகளுக்கான சிறப்பு விதிகளை மறுவெளியீடு செய்து ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவ்வரசாணைகளில் வெளியிடப்பட்ட சிறப்பு விதிகளில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் உள்ள பள்ளிகளில், ஆசிரியர் பணியிட நேரடி நியமனத்திற்கான உச்ச வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 40 வயது என்றும், இதர பிரிவினர்களுக்கு 45 வயது என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment