*பாரதியாரின் நினைவு தினம் - போட்டிகள் நடத்தி இளம் கவிஞர் விருது வழங்குதல் குறித்த பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!!! *
2022-23ஆம் ஆண்டு முதல் மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு கவிதைப் போட்டிகள் நடத்தி இளம் கவிஞர் விருது வழங்குதல் குறித்த பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பின்படி வரும் 2022-23 முதல் மகாகவி பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ , மாணவியர்களுக்கு கவிதைப் போட்டிகள் நடத்தி சிறந்த படைப்புகளை தெரிவு செய்து அந்த மாணவ , மாணவியர்களுக்கு " இளம் கவிஞர் விருது " மற்றும் பரிசுகள் வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே , மகாகவி பாரதியார் நினைவு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவியர்களுக்கு ஆகஸ்டு மாதம் முத வாரத்தில் ஒன்றிய அளவில் மாணவ மாணவியர்களுக்கு கவிதைப் போட்டிகள் நடத்தி , அதில் சிறந்த 3 மாணவர்கள் மற்றும் 3 மாணவிகளை தெரிவு செய்யவேண்டும்.
ஒன்றிய அளவில் தெரிவு செய்யப்பட்ட மாணவ , மாணவியருக்கு வருவாய் மாவட்ட அளவில் , ஆகஸ்டு மாதம் 3 வது வாரத்தில் கவிதைப் போட்டிகள் நடத்தி , அதில் சிறந்த ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவியை தெரிவு செய்யவேண்டும்.
வருவாய் மாவட்ட அளவில் தெரிவு செய்யப்பட்ட மாணவ , மாணவியருக்கு மாநில அளவில் , செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் போட்டிகள் நடத்தப்பட்டு , மாநில அளவில் ஒரு மாணவன் மற்றும் ஒரு மாணவி தேர்ந்தெடுக்கப்பட்டு மகாகவி நினைவு தினத்தன்று " இளம் கவிஞர் விருது " வழங்கி சிறப்பிக்கப்படுவர்.
இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..
For Whatsapp Group
For Telegram Group
எங்களது வலைத்தள முகவரி
No comments:
Post a Comment