*எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்கள் கவனத்துக்கு தேர்வுக் கூட அனுமதிச்சீட்டு பதிவிறக்கம் செய்தல் செய்தி குறிப்பு!!! *
நவம்பர், 2021-ல் நடைபெறும் தேர்வை எழுத விண்ணப்பித்துள்ள எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வுக் கூட அனுமதிச்சீட்டுகளை இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்வது தொடர்பான அறிவிப்பை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
இன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்,
08.11.2021 அன்று தொடங்கவுள்ள எட்டாம் வகுப்பு தனித் தேர்வினை தேர்வெழுத அரசுத் தேர்வுத் துறையின் சேவை மையங்களில் (சர்வீஸ் சென்டர்) ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் 29.10.2021 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.00 மணி முதல் http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பதிவிறக்கம் செய்யும் முறை
மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் ஹால் டிக்கெட் (Hall ticket)-என்ற வாசகத்தை கிளிக் செய்தால் “இஎஸ்எல்சி - நவம்பர் 2021 எக்ஸாமிநேஷன் - கான்டிடேட் ஹால் டிக்கெட்டவுன்லோடு (“ESLC - NOVEMBER 2021 EXAMINATION - CANDIDATE HALL TICKET DOWNLOAD”)என்ற தலைப்பின்கீழ் உள்ள டவுன்லோடு என்ற வாசகத்தினை கிளிக் செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்தால் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு திரையில் தோன்றும். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உரிய தேர்வுக்கூட அனுமதிச்சீட்டின்றி எந்த ஒரு தேர்வரும் தேர்வெழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.
மேற்காண் தேர்விற்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கு தேர்வுக்கூட எஅனுமதிச்சீட்டு குறித்து தனிப்பட்ட முறையில் அறிவிப்பு ஏதும் அனுப்ப இயலாது எனவும் தெரிவிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment