District Court Recruitment 2021 | Apply for Steno Typist @districts.ecourts.gov.in - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Tuesday, October 5, 2021

District Court Recruitment 2021 | Apply for Steno Typist @districts.ecourts.gov.in

Pudukkottai District Court Recruitment 2021 | Apply for Steno Typist @districts.ecourts.gov.in

புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு
Pudukkottai District Court Recruitment Details

புதுக்கோட்டை மாவட்ட நீதி துறை அலகில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப்பணி காலியாக உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை-3 பதவிகளுக்கு நியமனம் செய்யும் பொருட்டு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்

சுருக்கெழுத்து தட்டச்சர்

சம்பளம் 

Rs.20,600 – 65,500 + இதர படிகள்

காலிப்பணியிடம்

10

வயது வரம்பு

குறைந்தபட்ச வயது  – 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்

விண்ணப்ப கட்டணம்

கட்டணம் கிடையாது

ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து தேர்வு இரண்டிலும் கீழ்கண்டவாறு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

i. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை

(அல்லது)

ii. தமிழில் முதுநிலை மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை

(அல்லது)

iii. ஆங்கிலத்தில் முதுநிலை மற்றும் தமிழில் இளநிலை

மற்றும்

iv. கணினி அறிவு பெற்றிருக்க வேண்டும் .

விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்

18.10.2021

Pudukkottai District Court Recruitment 2021 | Apply for Steno Typist @districts.ecourts.gov.in

இதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள், சரியாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் உரிய சான்றுகள் இணைக்கப்படாத விண்ணப்பங்களும் ஏற்கப்பட மாட்டாது எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

பணியிடம் – புதுக்கோட்டை, தமிழ்நாடு

தேர்ந்தெடுக்கப்படும் முறை

எழுத்து தேர்வு முறை
செய்முறை தேர்வு

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி.

முதன்மை மாவட்ட நீதிபதி,

முதன்மை மாவட்ட நீதிமன்றம்,

புதுக்கோட்டை மாவட்டம் – 622 001.

குறிப்பு : 

1. விண்ணப்பங்கள் வரையறுக்கப்பட்ட படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்டு ( உரிய படிவத்தினை இந்நீதிமன்ற இணையதள வலைதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யவும் – website : https://districts.ecourts.gov.in/pudukkottai ) பதிவுத்தபால் மூலமாக மட்டுமே அனுப்பப்பட வேண்டும். வேறு வகையில் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

2.ஒரு தபால் உறையில் ஒரு விண்ணப்பம் மட்டுமே அனுப்பப்பட வேண்டும்.

3. விண்ணப்பதாரர் ஒரு கவரில் தனது சுய விலாசத்தை எழுதி அதில் ஸ்டாம்ப் ( ரூ .30 ) ஒட்டப்பட்டு பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும்.

4. பாஸ்போர்ட் அளவு புகைப்படம் விண்ணப்பத்தின் உரிய இடத்தில் ஒட்டப்பட்டு, புகைப்படத்தின் மேல் விண்ணப்பதாரர் கையொப்பம் இட வேண்டும் . மேலும் உரிய சான்றிதழ்களின் நகல்கள் சுய சான்றொப்பம் ( Self Attestation ) செய்து விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும். எக்காரணம் கொண்டும் அசல் சான்றிதழ்களை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பக் கூடாது . இருப்பினும் , நேர்முகத் தேர்விற்கு தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் , நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளும் போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் தாக்கல் செய்யவேண்டும் . சுயசான்றொப்பமிட்ட நகல்கள் இணைக்கப்படாத விண்ணப்பங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி முற்றிலும் நிராகரிக்கப்படும்.

5. முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் தவறான தகவல்கள் கொண்டுள்ள விண்ணப்பங்கள் முற்றிலும் நிராகரிக்கப்படும் .

6.முன்னுரிமை கோரும் நேர்வுகளில் , முன்னுரிமைக்கான உரிய சான்றிதழ்களின் நகல்கள் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும் .

7. தமிழ்வழிக் கல்விக்காக ஒதுக்கப்பட்ட இனசுழற்சி முறைக்கு , உரிய சான்றிதழ்களின் நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.

8. விண்ணப்பத்தாரர் தனது இருப்பிடச் சான்று குறித்து ( i ) ஆதார் அட்டை , ( ii ) வாக்காளர் அடையாள அட்டை , ( iii ) ஓட்டுநர் உரிமம் , ( iv ) குடும்ப அட்டை , ( v ) வங்கிக் கணக்கு புத்தகத்தின் முதல் பக்கம் ஆகியவற்றில் ஏதேனும் இரண்டின் நகல்களை சான்றொப்பமிட்டு விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும் .

Pudukkottai District Court Recruitment Notification

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Click here


Pudukkottai District Court Recruitment 2021 | Apply for Steno Typist @districts.ecourts.gov.in
விண்ணப்ப படிவம்




அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதளம் 


இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..

For Whatsapp Group

For Telegram Group

No comments:

Post a Comment