*_மழை, புயல், பந்த் போன்ற காரணங்களுக்காகக் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் நாட்களில் ஆசிரியர்கள் (மற்றும்) அமைச்சுப் பணியாளர்கள் பணிக்கு வருகை தரவேண்டுமா? அரசாணை!!!_* - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Thursday, November 11, 2021

*_மழை, புயல், பந்த் போன்ற காரணங்களுக்காகக் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் நாட்களில் ஆசிரியர்கள் (மற்றும்) அமைச்சுப் பணியாளர்கள் பணிக்கு வருகை தரவேண்டுமா? அரசாணை!!!_*

*_மழை, புயல், பந்த் போன்ற காரணங்களுக்காகக் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்படும் நாட்களில் ஆசிரியர்கள் (மற்றும்) அமைச்சுப் பணியாளர்கள் பணிக்கு வருகை தரவேண்டுமா? அரசாணை!!!_*

அரசு ஆணை நிலை எண். 1144, 
நாள்: 14.12.1993



மழை, புயல், பந்த், கலவரங்கள் போன்றவை ஏற்படும் சமயங்களில் அண்றைய தினம் கல்லூரிகள்! பள்ளிகள் மற்றும் இதர நிறுவனங்களுக்கு விடுமுறையென்று பொதுவாக அரசால் அறிவிக்கப்படுகிறது. அவ்வாறான நிகழ்வுகளில் கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறையா என்றும், அந்நாட்களில் ஆசிரியர்கள், ஆசிரியரில்லாப் பணியாளர்கள் மற்றும் அளாமச்சுப் பணியாளர்கள் பணிக்கு வர வேண்டுமா ஐயம் எழுவதால், அது குறித்து அரசாணை எதும் இருப்பின் அதன் நகல் அனுப்புமாறு தொழில் நுட்பக் கல்வி இயக்குநர் அரசிடம் கேட்டதற்கு இப்பொருள் குறித்து பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரிக் கல்வி இயக்குநருடன் கலந்து, அங்கு பினபுற்றப்படும் நடைமுறை குறிந்து அறிக்கை அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டது. அதன்படி பள்ளிக் கல்வி மற்றும் கல்லூரிக் கல்வி இயக்குநர்களிடமிருந்து மேற்படி இயக்ககங்களில் இது போன்ற நிகழ்வுகளில் பின்பற்றப்படும் முறை குறித்து பார்வை 2, 3-ல் காணும் கடிதங்களில் தகவல் பெற்று தொழில் நுட்பக் கல்வி இயக்குநர் அனுப்பி இப்பொருள் குறித்துத் தெளிவான அரசு ஆணை எதும் இருப்பின் அதன் நகலை அனுப்புமாறும் முகப்புப் பத்தியில் கண்ட சூழ்நிலைக் காவத்தில் பயிலகங்களில் பணியாளர்கள் (ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத அனைத்து பணியாளர்களும்) எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதற்கான தக்க தெளிவுரை வழங்குமாறும் தொழில் நுட்பக் கல்வி இயக்குநர் அரசை வேண்டியுள்ளார்.

2. மேற்படி தொழில் நுட்பக் கல்வி இயக்குநரின் ஐயப்பாட்டினை அரசு கவளமாகப் பரிசீலித்தது. இந்நிகழ்வில் பார்வை 2-ல் காணும் கடிதத்தில் தெரிவித்துள்ள பள்ளிக்கல்வி இயக்ககத்தில் பின்பற்றப்படும் முறையையே அனைத்து கல்வி நிறுவனங்களும் பின்பற்றுமாறு அறிவுறுத்தலாம் என அரசு முடியெடுத்தும் அதன்படி கடும் மழை, புயல், பந்த் கலவரங்கள் மற்றும் எதிர்பாராதசந்தர்ப்பங்கள் மற்றும் செலாவணி முறிச் சட்டப்படி அரசால் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படும் போது, மாணவர்களைப் போல் ஆசிரியர்களும் ஆசிரியால்லாப் பணியாளர்களும் கல்வி நிறுவனங்களுக்கு வருகை தர வேண்டியதில்லை என்றும், ஆனால் பள்ளி | கல்லூரி | முதல்வர் | மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர்களின் முடிவின்படி விடுமுறை

அளிக்கும் போது பாணவர்களும் ஆசிரியர்களும் கல்வி நிறுவனங்களுக்கு வருமக வேண்டியதில்லை. ஆசிரியரல்லா அமைச்சுப் பணியாளர்கள் கல்வி நிறுவனங்களுக்கு வருமக தருதஸ் வேண்டும் என்றும், எப்படி இருப்பினும், கல்வி ஆண்டில், நிணயிக்கப்பட்ட வேலை நாட்களுக்குக் குறைவு ஏற்படுமாயின் அரசு விடுமுறை நாட்களில் கல்வி நிறுவனங்கள் நடைபெற்று குறையுபடும் வேலை நாட்களை ஈடு செய்ய வேண்டும் என்றும் அரசு ஆணையிடுகிறது.


இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..

For Whatsapp Group

For Telegram Group

No comments:

Post a Comment