_*தொடக்க கல்வி இயக்குநர்..தொடர் மழை காலத்தில் அனைத்து வகை பள்ளிகள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுற்றறிக்கை வெளியீடு!*_ - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Thursday, November 18, 2021

_*தொடக்க கல்வி இயக்குநர்..தொடர் மழை காலத்தில் அனைத்து வகை பள்ளிகள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுற்றறிக்கை வெளியீடு!*_

*தொடக்க கல்வி இயக்குநர்..தொடர் மழை காலத்தில் அனைத்து வகை பள்ளிகள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சுற்றறிக்கை வெளியீடு!*

தொடக்கக் கல்வி துறையின்கீழ் இயங்கும் அனைத்து வகைப்பள்ளிகளிலும்

பயிலும் மாணவர்களை மழைக்காலங்களில் ஏற்படும் விபத்துகளிலிருந்து பாதுகாப்பதற்கென உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அவ்வப்போது பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த வாரங்களில் மழை பெய்துள்ள நிலையிலும், அடுத்து வரும் நாட்களில் தொடர் மழை எதிர்நோக்கப்படும் நிலையிலும், பள்ளி மாணாக்கர்களின் பாதுகாப்பிற்கென, ஆய்வு அலுவலர்களும், பள்ளித்தலைமை ஆசிரியர்களும் கூடுதல் கவனம் செலுத்திடும் பொருட்டு. கீழ்க்கண்ட அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

1.தொடர் மழையின் காரணமாக பள்ளியின் சுற்றுச்சுவர் மிகுந்த ஈரப்பதத்துடன் காணப்படலாம். எனவே சுற்றுச்சுவரிலிருந்து 20அடி தொலைவு வரை மாணவர்கள் யாரும் செல்லாதவாறு தடுப்புகள் ஏற்படுத்துவதுடன் மாணவர்கள் அருகில் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும்.

2. மழையின் காரணமாக பள்ளியின் சில வகுப்பறைகள் பாதிக்கப்பட்டிருப்பின் அத்தகைய வகுப்பறைகளை பயன்படுத்தாமல் பாதுகாப்பாக பூட்டிவைப்பதுடன் அவற்றின் அருகே மாணவர்கள் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும். மேலும் இடிக்கப்பட வேண்டிய கட்டிடங்கள் இருப்பின் மாணவர்கள் அத்தகைய கட்டிடங்களை அணுகாதவாறு அதனைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்திட வேண்டும்.

3. மின் இணைப்புகள் சரியாக உள்ளனவா என்றும், மின் கசிவு, மின்சுற்று கோளாறுகள் ஏதேனும் உள்ளனவா என்பதை ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதிப்படுத்திடவும். தேவையெனில் மின் இணைப்பை தற்காலிகமாக துண்டித்துவைக்கவும் அறிவுறுத்த்தப்படுகிறது. இத்தகைய நேர்வுகளில்மின்வாரிய பொறியாளரை உடனடியாக தொடர்பு கொண்டு இதனை சரிசெய்திட அறிவுறுத்தப்படுகிறது.

4. பள்ளி வளாகத்தில் உள்ள நீர்தேக்கப் பள்ளங்கள், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர்த் தொட்டி, மற்றும் நீர்தேக்கத் தொட்டிகள் இருக்கும் பட்சத்தில் அவையனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளனவா என்பதை உறுதி செய்வதுடன் மாணவர்கள் அருகில் செல்லாதவாறு வேண்டும். கண்காணிக்க

5. விடுமுறை நாட்களில் ஏரி, குளம் மற்றும் ஆறுகளில் குளிப்பதை மாணவர்கள் தவிர்த்திட அறிவுறுத்த வேண்டும். மழைக்காலங்களில் ஏரிகளில் உடைப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் விடுமுறை காலங்களில் வெளியே செல்வதை தவிர்க்கவும், குறிப்பாக நீர்நிலைகளுக்கு அருகே வேடிக்கை பார்க்க செல்லக்கூடாது எனவும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்குவதுடன் பெற்றோர்களுக்கும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தலைமையாசிரியர்கள் கோரப்படுகிறார்கள்.

6. ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடும் வழியினை, மழைக்காலங்களில் பள்ளிக்கு வரும் போதும். திரும்பிச் செல்லும் போதும் மாணவர்கள் அவ்வழியினை பயன்படுத்துவதை தவிர்த்திட அறிவுறுத்த வேண்டும்.

7. பள்ளியை விட்டு செல்லும் போது பழுதடைந்த அல்லது அறுந்து கிடக்கும்

மின்கம்பிகளை மாணவர்கள் தொடுவதோ அல்லது அருகாமையில்

செல்வதோ கூடாது என்று அறிவுறுத்த வேண்டும்.

8. மாணவர்கள் சாலையில் மழைநீர் கால்வாய்கள் இருக்கும் இடங்களில் கவனமாக செல்வதுடன் அதன் அருகில் செல்வதை தவிர்க்கவும் அறிவுறுத்த வேண்டும்.

9. பள்ளி வளாகத்தில் விழும் நிலையில் மரங்கள் ஏதேனும் இருப்பின் அதனை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

10. பள்ளி வளாகத்தில் ஆபத்தான நிலையில் உள்ள உயர்மின் அழுத்தமுள்ள மின்கம்பங்கள் மற்றும் அறுந்து தொங்கக்கூடிய மின்கம்பிகள் இருப்பின் அவைகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும்.

11. சுவிட்சுகள்(Switches) சரியாக உள்ளனவா மழைநீர் படாதவண்ணம் உள்ளனவா என்பதையும் தலைமையாசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டும். 12.மாணவர்களைக் கொண்டு மின்சாதங்களை கண்டிப்பாக இயக்கக்கூடாது.

13.பள்ளியில் உள்ள அனைத்துக் கட்டிடங்களின் மேற்கூரைகள் உறுதியாக உள்ளனவா என்று அவ்வப்போது ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேற்கூரையில் நீர் தேங்காவண்ணம் உடனடியாக தேங்கியுள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

14.பள்ளி வளாகத்தில் கட்டிட பராமரிப்பு பணிகள் மற்றும் புதிய கட்டிடங்கள் கட்டும் பணிகள் நடைபெறும் இடங்களுக்கு மாணாக்கர்கள் செல்ல



இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..

For Whatsapp Group

For Telegram Group

No comments:

Post a Comment