_*தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE EXAM) ஜனவரி-2022 மாணவர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்தல் காலஅவகாசம் நீட்டித்தல் - தொடர்பாக- அரசுத் தேர்வுகள் இயக்குநர் செயல்முறைகள்!!!*_ - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Monday, November 29, 2021

_*தேசிய திறனாய்வுத் தேர்வு (NTSE EXAM) ஜனவரி-2022 மாணவர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்தல் காலஅவகாசம் நீட்டித்தல் - தொடர்பாக- அரசுத் தேர்வுகள் இயக்குநர் செயல்முறைகள்!!!*_

தேசிய திறனாய்வுத் தேர்வு ஜனவரி-2022 மாணவர்களின் விவரங்கள் பதிவேற்றம் செய்தல் காலஅவகாசம் நீட்டித்தல் - தொடர்பாக- அரசுத் தேர்வுகள் இயக்குநர் செயல்முறைகள்


தேசிய திறனாய்வுத் தேர்விற்கு (NTS) விண்ணப்பித்த 10- ம் வகுப்பு பள்ளி மாணவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக 12.11.2021 பிற்பகல் முதல் 27.11.2021 வரை பதிவேற்றம் செய்யலாம் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது தொடர் மழையின் காரணமாக பதிவேற்றம் செய்வதற்கான காலஅவகாசம் 30.11.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எக்காரணம் கொண்டும் காலஅவகாசம் மேலும் நீட்டிக்கப்படாது இதனை தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி, மெட்ரிக் பள்ளி, ஆங்கிலோ-இந்தியன், CBSE மற்றும் KV (கேந்திர வித்யாலயா) பள்ளிகளுக்குத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.


இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..


No comments:

Post a Comment