_*2021-2022 ஆம் கல்வி ஆண்டு. தற்போதைய ஒன்றியத்தில் 30.11.2021 நிலவரப்படி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் வழிகாட்டுதல்கள் வெளியீடு!!!*_
2021 2022 ஆம் கல்வி ஆண்டிற்கான வட்டாரக் கல்வி அலுவலர் மாறுதல் பணிகள் இணைப்பில் உள்ள அட்டவணைப்படி நடைபெறவுள்ளது. இப்பொருள் சார்பான கலந்தாய்வு வழிகாட்டுதல்கள் கீழ் குறித்தவாறு வெளியிடப்படுகிறது.
1. தற்போது பணிபுரியும் ஒன்றியங்களில் 30.11.2021 நிலவரப்படி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கட்டாயமாக பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும்.
2 30.11.2021 நிலவரப்படி இரண்டு ஆண்டுகள் பணிமுடிக்காதவர்களும்
விருப்பத்தின் அடிப்படையில் மாறுதல் கலந்தாய்வில் கலந்துக்கொள்ளலாம். 3. 2021 2022 ஆம் கல்வி ஆண்டில் ஒய்வு பெறும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் தற்போதைய ஒன்றியத்தில் 30.11.2021 நிலவரப்படி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்திருந்தாலும் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துக்கொள்வதிலிருந்து
விலக்கு அளிக்கப்படுகிறது.
4. வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு முதலில் மாவட்டத்திற்குள்ளான மாறுதல் கலந்தாய்வும் பின்னர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வும் நடைபெறும்.
5. நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிலிருந்து பணிமாறுதல் / பதவி உயர்வு மூலம் வட்டாரக் கல்வி அலுவலர்களாக நியமனம் பெற்றவர்கள் தாங்கள் கடைசியாக நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களாக பணிபுரிந்த ஒன்றியத்தை மாறுதல் கலந்தாய்வில் தேர்வு செய்தல் கூடாது.
இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..
No comments:
Post a Comment