_*BREAKING NEWS: பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகள் கல்லூரிகள் திறப்பு - நாளை (ஜன.28) முதல் இரவுநேர ஊரடங்கு ரத்து தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!!!*_
தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரிகள் 1-2-2022 முதல் திறப்பு கொரோளா நோய்ப் பரவல் தடுப்புக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவு தமிழ்நாட்டில்
கொரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் அரசாணை எண்.25 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை நாள் 07-01-2022-ன்படி, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வார நாட்களில் இரவு 10.00 மணி முதல் காலை 5.00 மணி வரை இரவு நேர ஊரடங்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் நடைமுறையில் இருந்து வருகிறது.
ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கை எண்: 40-3{2020/DM-I(A), நாள் 27:12.2021-ல் கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தத் தேவையான கட்டுப்பாடுகள் விதிக்கவும் மற்றும் அவசியம் ஏற்படின் குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973, பிரிவு 144-ன் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளவும் மாநில அரசுகளுக்கு உத்தாவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தடுப்பு தடவடிக்கைகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் 27-1-2022 அன்று ஆலோசளைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாண்புமிகு மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப. மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அரசு மேற்கொண்ட சீரிய நடவடிக்கையினால் கொரோனா நோய்த் தொற்று பரவல் தற்போது குறைந்துள்ளதாகவும், போதுமான மருத்துவ கட்டமைப்புகள் தயார் நிலையில் இருப்பினும் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாக சுகாதாரத் துறையால் தெரிவிக்கப்பட்டது. மேலும்,
மாநிலத்தின் வேலைவாய்ப்பு, பொருளாதாரம், மாணவ மாணவியர்களின் எதிர்காலம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை மீள திரும்புவதற்கு ஏதுவாக. பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன.
இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..
No comments:
Post a Comment