மகப்பேறு விடுப்பு அரசாணை 84 ம.வ.மே.துறை நாள் 23/08/21 சார்ந்து சில விளக்கங்கள்... - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Monday, August 30, 2021

மகப்பேறு விடுப்பு அரசாணை 84 ம.வ.மே.துறை நாள் 23/08/21 சார்ந்து சில விளக்கங்கள்...

மகப்பேறு விடுப்பு அரசாணை 84 ம.வ.மே.துறை நாள் 23/08/21 சார்ந்து சில விளக்கங்கள்...

1) மகப்பேறு விடுப்பு *270 நாட்களில் இருந்து 365 நாட்களாக* உயர்த்தப்பட்டுள்ளது
(12 மாதங்கள்)

2) 01.07.2021 முதல் அமலுக்கு வருகிறது...

01.07.21 க்கு பிறகு விடுப்பு எடுப்பவர்களுக்கு 1 ஆண்டு விடுப்பு...

 இதில் தான் பலருக்கு சந்தேகம்...

3) 01.07.2021 க்கு முன்பிருந்து
01.07.2021 அன்று விடுப்பில் இருப்பவர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும்..

4) *தற்போது மகப்பேறு விடுப்பில் இருப்பவர்கள் இந்த அரசாணையை பயன்படுத்திக் கொள்ளலாம்...* 

5) 01.07.21 முதல் 23.08.21 வரை 9 மாத  மகப்பேறு விடுப்பு முடித்து பணியில் சேர்ந்தவர்கள் இந்த கூடுதல் 3 மாத விடுப்பை பயன்படுத்த இயலாது..

அவர்கள் மருத்துவர் தகுதி சான்றிதழ் அடிப்படையில் தான் விடுப்பு முடித்து பணியில் சேர்ந்து இருப்பார்கள்...
எனவே *மீண்டும் மகப்பேறு விடுப்பு வழங்க இயலாது...* 

அதே சமயம்... சிலர் 1/7/21 முதல் 23/08/21 வரை 9 மாதம் மகப்பேறு விடுப்பு முடிந்த பிறகும் மருத்துவ காரணங்களுக்காக *விடுப்பில் இருந்தால்* அவர்கள் இந்த 365 நாட்கள் விடுப்பை பயன்படுத்த இயலும்..

6) குழந்தை பிறப்பிற்கு முன் + குழந்தை  பிறப்பிற்கு பின் இந்த விடுப்பை எடுத்துக் கொள்ளலாம்...
(குழந்தை பிறந்த தினத்தில் இருந்து விடுப்பு கட்டாயம் துவங்க வேண்டும்)

7) உயிரோடு உள்ள *இரண்டு குழந்தைகள்* வரை இந்த விடுப்பு உண்டு ..

8) *தகுதி காண்* பருவத்தினர் 
 *தற்காலிக* பணியினர்களுக்கும் மகப்பேறு விடுப்பு உண்டு...

9) இதுவரை வந்துள்ள மகப்பேறு விடுப்பு சார்ந்த *அரசாணைகளின் தொகுப்பை* இணைத்துள்ளேன்...

10) அதிக நண்பர்களின் ஐயம்-
 மனைவி மகப்பேறு விடுப்பு போது *ஆண்களுக்கு விடுப்பு* உண்டா - தமிழக அரசில் அப்படி ஒரு விடுப்பு கிடையாது🙏🏻


தாயும் சேயும் நலமாக வாழ வாழ்த்துகளுடன் 💐💐💐

No comments:

Post a Comment