பள்ளி கல்லூரிகள் திறப்பதில் தேதி மாற்றம் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனையில் சற்றுமுன் வெளியான பரபரப்பு தகவல். கொரோனா நோய் தொற்றுக்கள் காரணமாக நம் இந்திய நாட்டில் கடந்த இரு ஆண்டுகளாக பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாமல் உள்ளது. தற்போது நோய் பரவல் குறைந்து வரும் காரணத்தால் நாட்டின் பல்வேறு மாநிலங்கள் பள்ளிகள் திறக்கப்பட்டு வருவதற்கான நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது தமிழகத்தில் வருகின்ற செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகளும் அனைத்து கல்லூரிகளையும் திறக்க தமிழக அரசு உத்தரவுபிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழக முதல்வர் திரு மு க ஸ்டாலின் அவர்கள் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளி கல்லூரிகள் திறப்பது குறித்து மீண்டும் ஆலோசனை
மேற்கொண்டுள்ளார்.
தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா மற்றும் பல மாநிலங்களில் நோய் பரவல் தீவிரமடைந்து வருவதையடுத்து பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்கலாமா! என்று முதல்வர் தலைமையிலான ஆலோசனைக் குழுவில் ஆலோசிக்கப்பட்டது. சற்றுமுன் வெளியான தகவலின்படி இந்த ஆலோசனை கூட்டத்தில் அண்டை மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள காரணத்தினால் பள்ளிகள் திறப்பதை தள்ளி வைக்கலாமா அல்லது 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் அறிவித்த தேதியில் திறக்கலாமா என்றும் ஆலோசனை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இது சார்பாக இன்று மாலை இது குறித்து முக்கிய சுற்றறிக்கை ஒன்று வெளியாகலாம் என்றும் தலைமைச் செயலக வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment