*பள்ளிகள் திறக்கப்படுவதை கண்காணிக்க மாவட்ட வாரியாக அதிகாரிகளை நியமித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
*கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஆனால், நாளை முதல் 9-12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித்துறை ஆயத்தமாகி வருகிறது.
*இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, பள்ளிகளில் 9 முதல் 12ம் வகுப்புகள் வாரத்தில் 6 நாட்களும் செயல்படும். வகுப்பறைகளில் தலா 20 மாணவர்கள் மட்டுமே அமர அனுமதிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
*மேலும், ஆசியர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் வேகமெடுத்துள்ளன.
*அனைத்து பாடங்களையும் நடத்தி முடிக்க இயலாத சூழல் நிலவுதால் பாடத்திட்டங்களை 50 சதவீதம் வரை குறைத்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
*இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்படுவதை கண்காணிக்க 37 மாவட்டங்களிலும் மாவட்ட வாரியாக அதிகாரிகளை நியமித்து பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
*இந்த 37 அலுவலர்களும் பள்ளிகள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் திறக்கப்படுகிறதா? வகுப்புகள் எவ்வாறு செயல்படுகின்றன? மாணவர்கள் வருகை எவ்வாறு இருக்கின்றன உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் அவர்கள் கண்காணிக்க உள்ளனர்.
No comments:
Post a Comment