தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியைகள் உள்ளிட்ட 44 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கினார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Sunday, September 5, 2021

தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியைகள் உள்ளிட்ட 44 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கினார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியைகள் உள்ளிட்ட 44 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கினார் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 

தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியைகள் உள்ளிட்ட 44 பேருக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய நல்லாசிரியர் விருதுகளை காணொளி மூலம் வழங்குகிறார். தேசிய ஆசிரியர் தினத்தை முன்னிட்டு மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் சார்பில் நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தொடர்ச்சியாக 2வது ஆண்டாக இன்றைய தினமும் காணொளி வாயிலாக இந்த நிகழ்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

குடியரசு தலைவர் மாளிகையில் இருந்தபடி குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் கலந்து கொண்டுள்ளார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகம் திருச்சி மாவட்ட பிராட்டியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் தலைமையாசிரியர் ஆஷா தேவி மற்றும் ஈரோடு முடக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின் ஆசிரியர் லலிதா உள்ளிட்ட 2 நபர்கள் உட்பட 44 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை காணொளி வாயிலாக தற்போது வழங்கி வருகிறார்.

தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியைகளுக்கும் இந்த விருது என்பது காணொளி வாயிலாகவே வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்தந்த மாவட்டத்தின் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காணொளி வாயிலாக கலந்துகொண்டு இந்த விருதுகளை பெற்றுள்ளனர். காணொளி வாயிலாக விருது வழங்கப்படும் போது விருது பெரும் ஆசிரியர்களின் புகைப்படம் திரையில் காட்டப்படும். அவர்களுக்கான சான்றிதழும் திரையிடப்படும்.

இதேபோன்று புதுச்சேரியை சேர்ந்த ஒரு ஆசிரியைக்கும் இந்த நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் சிறப்பு ஊக்கத்தொகை என்பதும் மத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் சார்பில் தற்போது வழங்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment