2014, 2015, 2016ம் ஆண்டுகளில்
வேலைவாய்ப்பை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
சென்னை, செப்.2: வீட்டுவசதி, சமூகநலத் துறை மானியக்கோ ரிக்கை விவாதத்தின் போது உதகமண்டலம் தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் ஆர்.கணேஷ் பேசுகையில், “வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 2014, 2015, 2016ம் ஆண்டுக்கான பதிவை புதுப்பிக்க தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும் என்றார். இதற்கு பதில் அளித்து, அமைச்சர் சி.வி.கணேசன் பேசுகையில், "வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இருப்பவர்களுக்கு, அதிலே பதிவுகளை புதுப்பிக்க தவறியவர்களுக்கு, மீண்டும் வாய்ப்பு தர வேண்டும் என்று உறுப்பினர் கேட்டு இருக்கிறார். கருணையுள்ளத்தோடு முதல்வர் மு.க.ஸ்டாலின் 2017, 2018, 2019ம் ஆண்டு ஆகிய 3 ஆண்டுகளுக்கு ஏற்கனவே புதுப்பிக்க தவறியவர்களுக்கு மாபெரும் ஒரு வாய்ப்பை உருவாக்கி தந்தார். அந்த பதிவை புதுப்பித்துக்கொள்ள ஆனால், தற்போது 3 மாதம் அவகாசம் கொடுக்கப்பட்டது. உறுப்பினர் 2014ம் ஆண்டு, 2015, 2016ம் ஆண்டுகளுக்கும் பதிவுகளை புதுப்பிக்க ஏராளமான இளைஞர்கள் தவறி யிருக்கிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு வேண்டும் என்று கேட்டிருக்கிறார். உறுப்பினரின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு எடுத்து சென்று, ஆலோசித்து நிச்சயமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுப்பினருக்கு தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.
சட்டப்பேரவையில் அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு

No comments:
Post a Comment