HR SEC SECOND YEAR AUG 2021 SCAN COPY DOWNLOAD AND RETOTALING II AND REVALUATION INSTRUCTION - மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வு விடைத்தாட்களின் நகலினை இணையதளத்தில் பதிவிறக்கம் - அரசு தேர்வுத்துறை
மேல்நிலை இரண்டாம் ஆண்டு துணைத் தேர்வு விடைத்தாட்களின் நகலினை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளல் மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல்
ஆகஸ்ட் 2021, மேல்நிலை இரண்டாமாண்டு துணைத் தேர்வெழுதி விடைத்தாட்களின் நகல் கோரி விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் 01.10.2021 (வெள்ளிக் கிழமை) முற்பகல் 11.00 மணி முதல் 05:10.2021 (செவ்வாய் கிழமை) வரையிலானா நாட்களில் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று Notification-ஐ Clich செய்தயுடன் HSE Second Year Supplementary Exam, Aug 2021 + "Scripts Download" என்ற வாசகத்தினை "Click" செய்தால் தோன்றும் பக்கத்தின் தனித்தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாட்களின் நகலினைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத்தாட்களின் நகலினை பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் - II அல்லது மறுமதிப்பிட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பினால், இதே இனையதள முகாவரில் Notification பக்கத்தில் "Application for: Retotaling : Ravaluation" என்ற தலைப்பினை CIck செய்து வெற்று விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.
இவ்விண்ணப்பப் படிவத்தினை, பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து 04.10.2021 திங்கட் கிழமை காலை 10.00 மணி முதல் 05.103.2021 (செவ்வாய் கிழமை) மாலை 5.00 மணிக்குள் உரிய முதன்மைக் கல்வி அலுவர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல் மற்றும் மறுபதிப்பீட்டிற்கான கட்டணத்தினை முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும்.
No comments:
Post a Comment