*மாணவ மாணவிகள் 2020-2021 ஆம் கல்வியாண்டு இடை நிற்றலை தவிர்க்கும் பொருட்டு சிறப்பு ஊக்கத் தொகை வழங்கும் திட்ட செயல்முறை கடிதம்!!! *
அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில்
பயிலும் (சுயநிதி வகுப்பு/ பிரிவு நீங்கலாக) 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ / மாணவியரின் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் பார்வை (1) -ல் கண்டுள்ள அரசாணையின்படி 2011-2012 ஆம் கல்வி ஆண்டு முதல் அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பார்வை (2)-ல் கண்டுள்ள பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி 2020-2012 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் (சுயநிதியில் செயல்படும் வகுப்பு/ பிரிவு நீங்கலாக) 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவ / மாணவியரது எண்ணிக்கை விவரங்கள், பார்வை (5)-ல் கண்டுள்ளவாறு அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்டதன் அடிப்படையில் பார்வை (3)-ல் கண்டுள்ள அரசாணையின்படி இத்திட்டத்திற்கென நிதி ஒதுக்கீடு செய்து ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் இவ்வரசாணையில், இத்திட்டத்தினை செயல்படுத்த 2011-2012 ஆம் ஆண்டில் கடைபிடிக்கப்பட்ட நடைமுறைகள் மற்றும் நிபந்தனைகள் பின்பற்றப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளநிலையில் தொடர்புடைய மாணவ, மாணவியரின் பெயரிலான வைப்பீடு பத்திரங்கள் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு நிறுவனத்தால் [TamilNadu Power Finance and Infrastructure Development Corporation Limited]வழங்கப்பட உள்ளது.
எனவே, மேற்படி வைப்பீடு பத்திரத்தில் மாணவ, மாணவியரின் பெயர் மற்றும் விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டியுள்ளதால், ஒவ்வொரு பள்ளியிலும், வகுப்பு வாரியாக 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு ஆசிரியர்கள் உள்ளிட்ட இதர ஆசிரியர்கள் அடங்கிய குழுவினை அமைத்து பள்ளி ஆவணங்கள் மற்றும் வங்கிக் கணக்குப்புத்தகம் ஆகியவற்றின்படி மாணவ, மாணவியரின் விவரங்களைக் கூர்ந்தாய்வு செய்து அவ்விவரங்களை EMIS Portal-ல் சிறப்பு ஊக்கத் தொகை விவரப்பட்டியலில், எந்த கலமும் விடுபடாமலும் பூர்த்தி செய்து 28.10.2021 பதிவு செய்யும்படி அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் மேற்கண்ட விவரங்களைத் தயார் செய்யும் போது கீழ்க்கண்ட அறிவுரைகளை (Instructions) பின்பற்றி 10,11 மற்றும் 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியரின் விவரங்களை மிகத் துல்லியமாக பதிவு செய்யும் பணியினை மேற்கொள்ளுமாறு அனைத்து தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment