ஆசிரியர் சங்க பொறுப்பாளர்களுடன் 21.10.2021 அன்று சென்னையில் கலந்தாலோசனை மற்றும் அறிமுகக் கூட்டம் - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!!
பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசுப் பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளுக்கு 01.11.2021 முதல் பள்ளிகள் செயல்படும் என மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களாளும் , மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களாளும் அறிவிக்கப்பட்டது தாங்கள் அனைவரும் அறிந்ததே. பள்ளிகள் திறக்கப்படும் போது குழந்தைகளை உளவியல் ரீதியாக அனுகுவது சார்ந்தும் , இல்லம் தேடிக் கல்வி என்கின்ற சிறப்பான திட்டத்தை எவ்வாறு பள்ளிக் கல்வித் துறை செயல்படுத்த போகிறது என்பதற்கான விளக்கக் கூட்டமும் நடைபெறவிருப்பதால் இது சார்ந்த ஆலோசனைகள் தங்கள் அனைவரிடமிருந்தும் வரவேற்றக்கப்படுகிறது.
எனவே இது சார்ந்து பள்ளிக் கல்வி இயக்ககவளாகத்தில் வருகின்ற 21.10.2021 அன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்திற்கு இணைப்பில் காணும் ஆசிரியர் சங்கத்தின் ' மூன்று பொறுப்பாளர்கள் மட்டுமே கலந்து கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment