*சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் பணி ஓய்வு பெறும் வயதினை 58லிருந்து 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு!!! அரசாணை எண். 63, நாள்:08.10.2021* - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Monday, October 11, 2021

*சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் பணி ஓய்வு பெறும் வயதினை 58லிருந்து 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு!!! அரசாணை எண். 63, நாள்:08.10.2021*

சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் பணி ஓய்வு பெறும் வயதினை (Retirement age on superannuation) 58லிருந்து 60 ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு!!! 

அரசாணை எண். 63, நாள்:08.10.2021*

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை - புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் - சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் - வயது முதிர்வில் பணி ஓய்வு பெறும் வயதினை (Retirement age on superannuation) 58லிருந்து 60 ஆக (Completion of 60 years) உயர்த்துதல் 


தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால், சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் 07.09.2021 அன்று, ஏனையவற்றுக்கிடையே, பின்வருமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டது

“சத்துணவு மையங்களில் பணிபுரியும் சத்துணவு சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் ஆகியோரின் ஓய்வுபெறும் வயது 58-லிருந்து 60-ஆக உயர்த்தப்படும். இதன் மூலம் தற்போது பணியிலிருக்கும் 29 ஆயிரத்து 137 சமையலர்களும், 24 ஆயிரத்து 576 சமையல் உதவியாளர்களும் பயன் பெறுவார்கள்.

2 மேற்காணும் அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை இயக்குநர் அவர்கள் மேலே இரண்டாவதாக படிக்கப்பட்ட கடிதத்தில், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வரும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு வயது முதிர்வு ஓய்வு 60 வயதில் வழங்கப்பட்டு வருகிறது என்றும், அரசாணை (நிலை) எண்.70, சமூக நலம் மற்றும் சத்துணவுத் திட்டத் (கூதி.1)துறை. நாள் 23.04.1998-இல் சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர்களுக்கும் சமையல் உதவியாளர்களுக்கும் ஓய்வு பெறும் வயது 55-லிருந்து 58.ஆக உயர்த்தப்பட்டதாகவும், இவ்வரசாணையின்படியே சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கு தற்போது வரை வயது முதிர்வு ஓய்வு அளிக்கப்பட்டு வருகின்றது என்றும் தெரிவித்து, சட்டமன்றப் பேரவை விதி 110-ன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் சத்துணவு மையங்களில் பணிபுரிந்து வரும்சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களின் ஓய்வு பெறும் வயதினை 58 லிருந்து 60 ஆக உயர்த்தி ஆணை வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

3. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை இயக்குநரின் கருத்துருவினை அரசு கவனமுடன் பரிசீலனை செய்து, அதனை ஏற்று, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டத்தின் கீழ் சத்துணவு மையங்களில் பணிபுரிந்து வரும் சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்களின் வயது முதிர்வில் ஓய்வு பெறும் வயதினை

(Retirement age on superannuation) 58 லிருந்து 60 (Completion of 60 years) ஆக உயர்த்தி ஆணையிடுகிறது. 4. இவ்வரசாணை வெளியிடப்படும் நாள் முதல் நடைமுறைக்கு வரும் என்றும்
ஆணையிடப்படுகிறது. 

5.இவ்வாணை நிதித்துறையின் இசைவுடன் அதன் அ.சா.எண்.39400/நிதி(சந)/2021, நாள்.21.09.2021-ன்படி வெளியிடப்படுகிறது.


இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..

For Whatsapp Group

For Telegram Group

No comments:

Post a Comment