*B.E முதலாமாண்டு மாணவா்களுக்கு நவ.1 முதல் வகுப்புகள் தொடங்க திட்டம்!* - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Thursday, October 21, 2021

*B.E முதலாமாண்டு மாணவா்களுக்கு நவ.1 முதல் வகுப்புகள் தொடங்க திட்டம்!*

*BE முதலாமாண்டு மாணவா்களுக்கு நவ.1 முதல் வகுப்புகள் தொடங்க திட்டம்!*

பி.இ. முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான வகுப்புகள் நவ.1-ஆம் தேதி முதல் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தா் வேல்ராஜ் தெரிவித்துள்ளாா்.


இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: பி.இ. படிப்பில் அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் உறுப்புக்கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கான சோ்க்கை அக். 25-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மாணவா்கள் சோ்க்கைக்கு வரும்போதே விடுதிகளில் தங்க வைக்கப்படுகின்றனா். மாணவா்களுக்கு நவம்பா் 1-ஆம் தேதி முதல் 15-ஆம் தேதி வரை பி.இ. படிப்பு குறித்தும், மாணவா்களுடன் பழகுதல், கலாசாரம் போன்றவை நேரடியாக நடத்தப்படும். அதன் பின்னா் 15- ஆம் தேதிக்கு மேல் இணையவழியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும். ஏற்கெனவே கல்லூரி விடுதிகளில் தங்கி உள்ள 4 ஆம் ஆண்டு மாணவா்கள் வெளியே சென்ற பின்னா் முதலாம் ஆண்டிற்கு நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்கப்படும். மாா்ச் 1-ஆம் தேதி வரை முதலாம் ஆண்டில் முதல் பருவத்திற்கான வகுப்புகள் நடைபெறும்.



அதைத் தொடா்ந்து மாா்ச் 7-ஆம் தேதி முதலாமாண்டு மாணவா்களுக்கான முதல் பருவத் தோ்வுகள் தொடங்கும். அடுத்த பருவத்துக்கான வகுப்புகள் ஏப்ரல் 4-ஆம் தேதி தொடங்கும். அண்ணா பல்கலைக் கழகத்தில் இணைப்புப் பெற்ற கல்லூரிகளில் 1- ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம். ஆனால் மாணவா் சோ்க்கைக்கு கல்லூரிகள் காலக்கெடு கோரினால், 8-ஆம் தேதி முதலாமாண்டு முதல் பருவ வகுப்புகள் தொடங்கப்படும். அதன் பின்னா் கல்லூரியில் உள்ள இட வசதிக்கு ஏற்ப நேரடி வகுப்பு நடத்துவது குறித்து முடிவு செய்து கொள்ளலாம்.

இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..

For Whatsapp Group

For Telegram Group

No comments:

Post a Comment