10th MARKSHEET CORRECTION, DIRECTORATE OF EXAMINATION PROCEEDING - பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழில் திருத்தங்கள் ஏதும் இருப்பின் விபரங்கள் அனுப்ப அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு!! - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Tuesday, October 5, 2021

10th MARKSHEET CORRECTION, DIRECTORATE OF EXAMINATION PROCEEDING - பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழில் திருத்தங்கள் ஏதும் இருப்பின் விபரங்கள் அனுப்ப அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு!!

பத்தாம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழில் திருத்தங்கள் ஏதும் இருப்பின் விபரங்கள் அனுப்ப அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு!! 

10th MARKSHEET CORRECTION, DIRECTORATE OF EXAMINATION PROCEEDING

மார்ச் 2021 , இடைநிலைப் பள்ளி விடுப்பு சான்றிதழ் பொதுத் தேர்வு தொடர்பாக அச்சடித்து வழங்கப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்களில் திருத்தங்கள் ஏதேனும் பள்ளிகளிலிருந்து பெறப்படின் , உதவி இயக்குநர்கள் அதனைத் தொகுத்து பட்டியலிட்டு தகுந்த ஆதாரங்களுடன் கீழ்குறிப்பிட்டுள்ள நகலுடன் இணைத்தனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


1. தற்காலிகச் சான்றிதழில் பதிவுகள் சரியாக இருப்பின் அதன் நகலை இணைத்தனுப்ப வேண்டும் . (தலைமையாசிரியர் 
சான்றொப்பமிட்டது ) 

2. தேர்வரின் பிறந்த தேதி , முகப்பெழுத்து மற்றும் பெயர் திருத்தங்கள் ( தமிழ் / ஆங்கிலம் ) எனில் மாற்றுச்சான்றிதழின் சான்றொப்பமிட்ட நகலை இணைத்தனுப்ப வேண்டும் .
 ( தலைமையாசிரியர் சான்றொப்பமிட்டது ) 

3. தந்தை / தயார் பெயர் ( தமிழ் / ஆங்கிலம் ) ஏதேனும் திருத்தங்கள் இருப்பின் தலைமை ஆசிரியரிடமிருந்து பெறப்பட்ட ஆளறிச்சான்றிதழ் ( Bonafide Certificate ) இணைத்தனுப்ப வேண்டும்.


இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..

For Whatsapp Group

For Telegram Group

No comments:

Post a Comment