*TNPSC, Group IV, Group II, Group I, TRB, TET, PC, RRB, BANK, ALL GOVERNMENT EXAM, #2.HISTORY MATERIALS - சிந்து சமவெளி நாகரிகம்!!! * - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Saturday, October 23, 2021

*TNPSC, Group IV, Group II, Group I, TRB, TET, PC, RRB, BANK, ALL GOVERNMENT EXAM, #2.HISTORY MATERIALS - சிந்து சமவெளி நாகரிகம்!!! *

*TNPSC, Group IV, Group II, Group I, TRB, TET, PC, RRB, BANK, ALL GOVERNMENT EXAM, #2.HISTORY MATERIALS - சிந்து சமவெளி நாகரிகம்!!! *


1.சிந்து சமவெளி அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட ஆண்டு – 1921

2.மனித இனம் முதன் முதலில் தோன்றியதாகக் கருதப்படும் இடம் – இலெமூரியா

3.ஏழு நதிகள் பாயும் நிலத்தின் பெயர் – சப்த சிந்து

4.இந்திய அகழ்வாராய்ச்சித் துறையின் தந்தை – அலெக்ஸாண்டர் கன்னிங்காம்.

5.இந்திய நாகரிகத்தின் தொடக்க காலம் – சிந்து சமவெளி நாகரிகம்

6.சிந்து சமவெளி மக்களுக்கு தெரியாத உலோகம் – இரும்பு

7.சிந்துவெளி மக்களின் எழுத்து முறை – சித்திர எழுத்து முறை

8.சிந்து சமவெளி எழுத்துக்களுக்கு pictograph என்று பெயர்.

9.எழுதும் முறை – வலமிருந்து இடமாகவும், இரண்டாவது வரியை இடமிருந்து வலமாகவும் எழுதினர்.

10.உலகத்திலேயே சிந்து சமவெளியில் தான் பருத்தி முதன் முதலாகப் பயிரிடப்பட்டது.

11.பருத்திக்குக் கிரேக்க மொழியில் சிந்தோன் என்று பெயர்.

12.சிந்து சமவெளி மக்கள் பலவிதமான சின்னங்களை வியாபாரத்திற்கு பயன்படுத்தினர்

13.சிந்து சமவெளி மக்கள் விளையாட்டுப் பொருள்கள் செய்ய சுடுமண் பயன்படுத்தினர்.

14.சிந்து சமவெளி மக்கள் அறியாத விலங்கு – குதிரை

15.சிந்து சமவெளி முத்திரைகள் 10 வகையான வடிவங்களில் கிடைத்துள்ளன.

16.அகழ்வாராய்ச்சியில் கிடைத்த மிகவும் பெரிதாக எழுதப்பட்டுள்ள எழுத்தின் நீளம் 37 செ.மீ.

17.ஹரப்பாவிற்கும் மொகஞ்சதாரோவிற்கும் இடைத்தூரம் – 400 மைல்

18.மக்கள் ஓய்வு நேரத்தில் சதுரங்கம் விளையாடினர்.

19.இசை, நடனம், கோழிச் சண்டை, காளைச் சண்டை போன்றவை நடைபெற்றது.

20.சிந்து சமவெளி கிணறுகள் 65 அடி ஆழத்துடன் இருந்துள்ளன.

21.மஞ்சிட்டி என்ற நீர்ப்பூண்டு வகையைப் பயன்படுத்திச் சிந்து சமவெளி மக்கள் துணிகளுக்குச் சிவப்பு நிறத்தை ஏற்றியிருக்கிறார்கள்.

22.குழந்தைகள் விளையாடச் சக்கரம் கொண்ட பொம்மைகள், குட்டி வண்டியில் பொருத்தப்பட்ட பொம்மைகள் கிடைத்துள்ளன.

ஹரப்பா நாகரிகம்:

1.ஹரப்பா நாகரிகத்தின் கால வரையறை  – கி.மு.3250 -கி.மு 2750

2.ஹரப்பா ராவி நதிக்கரையின் மேல் மாண்ட்கோமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

3.ஹரப்பா நகரத்தை கண்டுபிடித்தவர் – ராய் பகதூர் தயாராம் சஹானி(1921)

4.ஹரப்பா நகர நாகரிகம் எந்த காலத்தை சேர்ந்தது – செம்பு கற்காலம்

5.ஹரப்பா என்ற சொல்லின் பொருள் – புதையூண்ட நகரம்

6.ஹரப்பா நாகரிகம் எந்த நாகரிகம் – நகர நாகரிகம்

7.ஹரப்பா மக்களின் முக்கியக் கடவுள் – பசுபதி (சிவன்)
டெரக்கோட்டா என்பது – சுடு மண்பாண்டம்
இதில் மிகப்பெரிய தானியக் களஞ்சியங்கள் 6 உள்ளன.இது 71மீ நீளமும்23மீ அகலமும் கொண்டது.
இம்மக்கள் எருதுகளை வணங்கினர்.பருத்தி பயிரிட்டனர்.
16 மற்றும் அதன் மடங்குகளைப் பயன்படுத்தினர்.

8.ஹரப்பா பண்பாட்டின் மிகச் சிறந்த கண்டுபிடிப்பு முத்திரைகள் ஆகும்.
முத்திரைகளில் காளையின் உருவங்களும் பிறவிலங்குகளின் உருவங்களும் காணப்படுகின்றன. வியாபாரதிற்கு இவர்கள் முத்திரைகளை பயன்படுத்தினர்.

9.முக்கிய உணவு – கோதுமை, பார்லி
ஹரப்பாவில் வெண்கல அளவு கோல் கண்டறியப்பட்டுள்ளது.
மொகஞ்சதாரோ நாகரிகம்:

10.மொகஞ்சதாரோவை கண்டுபிடித்தவர் – பானார்ஜி(1922)
மொகஞ்சதாரோ என்னும் சிந்தி மொழிச் சொல்லின் பொருள் – இடுகாட்டு மேடு
சிறப்பான கழிவுநீர் வெளியேற்ற வசதி உள்ளது.

11.கால்வாய்கள் சுண்ணாம்புக் கலவை, சுண்ணாம்புக்கல் மற்றும் ஜிப்சம் போன்றவற்றைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.

12.மொகஞ்சதாரோவில் பெரிய குளியல் குளம் ஒன்று உள்ளது.இது8மீ நீளமும், 7.01மீ அகலமும் 2.4மீ ஆழமும் கொண்டது.

13.ஆடை மாற்றும் அறை காணப்பட்டது.இக்குளத்தில் நீர்வர செங்கல்லானா குழாய்கள் உள்ளன. நீருக்குள் செல்ல அகலமான படிக்கட்டுகள் இருந்தன.
நகரங்கள் 2 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.

14.மேல்பகுதி (அல்லது) சிட்டாடல் மற்றும் கீழ்பகுதி.
மேல்பகுதியில் – பொதுக் கட்டிடங்கள், தானியக் கிடங்குகள், முக்கிய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் சமயக் கட்டிடங்கள் உள்ளன.

15.கீழ்பகுதி – மக்கள் வாழ்வதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
கோதுமை, பார்லி, கேழ்வரகு, பட்டாணி, எள், கடுகு, அரிசி(லோத்தல்), பருத்தி,பேரீச்சம்பழம், தர்பூசணி மற்றும் பிற பயிரிடப்பட்டன.
மரத்தாலான கலப்பைகள் பயன்படுத்தபட்டன.
ஆயுதங்கள் பெரும்பாலும் தாமிரம் மற்றும் வெண்கலத்தால் செய்யப்பட்டன.
வெண்கலத்தை உருவாக்க ராஜஸ்தானில் கேத்ரி மற்றும் பலுசிஸ்தான் ஆகியவற்றில் தாமிரமும், ஆப்கானிஸ்தானிலிருந்து தகரம் பெறப்பட்டன.
ஆடைகளில் அதிகமாக ஆபரணங்கள் (தங்கம், வெள்ளி, தந்தம் மற்றும் தாமிரம்) பயன்படுத்தப்பட்டன.
மண்பாண்டம் செய்யும் சக்கரம் பயன்பாட்டிலிருந்தது.
மண்பாண்டங்கள் சிவப்பு மற்றும் கருப்பு நிறத்திலிருந்தன.
தாயக்கட்டை விளையாட்டு விளையாடினர்.

16.மொஹஞ்சதாரோவில் நடனமாடும் மங்கையின் வெண்கல உருவம் கண்டெடுக்கப்பட்டது.
அறுவடைக்காக, அரிவாள் போன்ற கருவிகள் பயன்படுத்தினார்கள். இவை பெரும்பாலும் கற்களாலும் வெண்கலத்தாலும் செய்யப்பட்டிருந்தன.
அன்றைய கால முத்திரைகளிலும், ஓவியங்களிலும் காளை மாடுகளின் உருவம் முக்கிய இடம் பெறுகிறது.
ஆடுகள், யானைகள், ஒட்டகங்கள், கழுதைகள், நாய்கள், பூனைகள் ஆகியவை வளர்க்கப்பட்டன.
ஆட்டு இறைச்சி உணவானது. அதன் ரோமம் குளிர்கால உடைகளின் மூலப் பொருளானது.

17.வீட்டுக் காவலுக்கு நாய்கள்.தானியங்களைச் சூறையாடும் எலிகளை அழிக்கப் பூனைகள் வளர்க்கப்பட்டன.
முக்கிய உணவுகள்: கோதுமை, பார்லி, திணை, பால், மாட்டு இறைச்சி, ஆட்டு இறைச்சி, மீன்
முக்கியத் தொழில்கள்: விவசாயம்,வேட்டையாடுதல், மீன் பிடித்தல்
எருமையை ஒரு மனிதன் வேட்டையாடும் முத்திரைச் சின்னங்கள் கிடைத்துள்ளன.
இன்னும் பல முத்திரைகளில் மீன், படகுகள், வலை ஆகிய உருவங்கள் பதிக்கப்பட்டுள்ளன.

18.உயர் மட்டத்தினர் மட்டுமே பருத்தி ஆடைகள் அணிந்தனர். எளிய மக்கள் சணல், கம்பளி ஆடைகளைப் பயன்படுத்தினார்கள்.
மொஹஞ்சதாரோவின் மிகப்பெரிய கட்டட அமைப்பு –  தானியக் களஞ்சியம்.இது 150 அடி நீளமும், 50 அடி அகலமும் கொண்டது.
சமூகக் கூடமும் மாடிக்கட்டிடமும் காணப்பட்டன.
காளிபங்கன்:

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது.
காளிபங்கன் சரஸ்வதி நதிக்கரையில் (காக்கரா) மீது அமைந்துள்ளது.
உழவுத் தொழில் மேற்கொள்ளப்பட்டது.
லோத்தல்:

1.எஸ்.ஆர்.ராவ் என்பவரால் 1957ல் கண்டுபிடிக்கப்பட்டது.

2.குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் மாநிலத்தில் உள்ளது.

3.சிந்து சமவெளி நாகரிகத்தின் வாணிகத் துறைமுக நகரம்.இது பாக்குவார் நதிக்கரையின் மீது அமைந்துள்ளது.

4.இது வெளிநாட்டுடன் தொடர்புடையது.
இது மனிதனால் உருவாக்கப்பட்டது.இந்நாகரிகம் ஆரியர் வருகை அல்லது ஆற்று வெள்ளத்தால் அழிந்திருக்கக்கூடும்.

ரூப்பர்:

இது பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது.
ஹரப்பா அல்லது அதற்கு முந்தைய காலத்தைச் சார்ந்தது.
1953-ல் ஒய்.டி.சர்மா என்பவரால் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டது.
திட்டமிட்ட நகர அமைப்பைக் கொண்டது.பெரிய பகுதிகள் சாலைகளால் அமைக்கப்பட்டன.குறிப்பிட்ட இடைவெளிகளில் காணப்பட்ட தெருவிளக்குத் தூண்கள் தெருவிளக்கு அமைப்பைக் காட்டுகின்றன.


இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..

For Whatsapp Group

For Telegram Group

No comments:

Post a Comment