_*மதுரையில் கலைஞர் நூலகம் - பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு!!அரசாணை (நிலை) எண்.100, நாள் 23.11.2021!!! *_ - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Thursday, November 25, 2021

_*மதுரையில் கலைஞர் நூலகம் - பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு!!அரசாணை (நிலை) எண்.100, நாள் 23.11.2021!!! *_

_*மதுரையில் கலைஞர் நூலகம் - பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு!!!*_
அரசாணை (நிலை) எண்.100, நாள் 23.11.2021.


ஜுன் 3 முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 97வது பிறந்த நாளை முன்னிட்டு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 03.06.2021 அன்று ஏனையவற்றுள் கீழ்க்காணும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது:

சங்கத் தமிழ் வளர்த்த மதுரையில் கலைஞர் நினைவு நாலக

புத்தகங்கள் மீதும், புத்தகங்களை வாசிப்பதன் மீதும் தலைவர் கலைஞர் அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் இருந்த தீராப் பற்றினை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இதன் வெளிப்பாடாகத்தான், 2010 ஆம் ஆண்டில், பேரறிஞர் அண்ணா அவர்களின் 102-வது பிறந்தநாள் அன்று, சென்னை கோட்டூர்புரத்தில், ஆசியாவின் அதிநவீன மிகப் பெரிய நூலகம் எனப் போற்றப்படும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தைத் திறந்து வைத்தார்கள். மாணவர்கள். கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், இலக்கியவாதிகள், போட்டித் தேர்வுகளுக்குத் தம்மைத் தயார்படுத்திக் கொள்ளும் இளைஞர்கள், பள்ளிச் சிறார்கள் என சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் அறிவொளி அளிக்கும் கலங்கரை விளக்கமாக இந்த நூலகம் விளங்கி வருகிறது என்று சொன்னால், அது மிகையாகாது. தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில் வாழும் மக்களும், இத்தகைய அரிய வாய்ப்பினைப் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு. இரண்டு இலட்சம் சதுர அடி பரப்பளவில் நவீன வசதிகளுடன் கூடிய வகையில் மதுரையில் 70 கோடி ரூபாய் செலவில் கலைஞர் நினைவு நூலகம் ஒன்று அமைக்கப்படும்"



இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..




No comments:

Post a Comment