_*ஆசிரியர் - மாணவர்கள் பணியிட நிர்ணயம் - ஆய்வு செய்ய இயக்குநர் உத்தரவு!!!*_ - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Tuesday, November 23, 2021

_*ஆசிரியர் - மாணவர்கள் பணியிட நிர்ணயம் - ஆய்வு செய்ய இயக்குநர் உத்தரவு!!!*_

ஆசிரியர் - மாணவர்கள் பணியிட நிர்ணயம் - ஆய்வு செய்ய இயக்குநர் உத்தரவு

தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் 01.08.2021 இல் உள்ளவாறு ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்ணயம் ஆய்வு செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!


 மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் கீழ் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள ஊராட்சி / நகராட்சி / மாநகரட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 இன்படியும் ,  அரசாணையின்படியும் , ஒவ்வொரு ஆண்டும் காலமுறை தோறும் ( Perodically ) ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்ணயம் செய்வது போன்று இவ்வாண்டும் 01.08.2021 இல் உள்ளவாறு ஆசிரியர் / மாணவர்கள் பணியிட நிர்ணயம் மேற்கொள்வது சார்ந்து இத்துடன் இணைக்கப்பட்டுள்ள 1 முதல் 8 படிவங்களில் 01.08.2021 அன்று பள்ளி மாதாந்திர அறிக்கை மற்றும் EMIS அடிப்படையில் எவ்வித தவறுக்கும் இடமின்றி விவரங்களைப் பூர்த்தி செய்ய அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் தக்க அறிவுரை வழங்குமாறு சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குவது சார்பாகவும் , மேலும் மேற்குறித்த படிவங்களைப் பூர்த்தி செய்யும்போது கீழ்குறித்த அறிவுரைகளைத் தவறாமல் பின்பற்றுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது





இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..


No comments:

Post a Comment