_*G.O(2D).No.15, Dated:26.07.2021 - 2020-2021ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி என அச்சிட்டு வழங்கப்படும் என்று அரசாணை வெளியீடு!!!*_ - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Monday, November 15, 2021

_*G.O(2D).No.15, Dated:26.07.2021 - 2020-2021ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி என அச்சிட்டு வழங்கப்படும் என்று அரசாணை வெளியீடு!!!*_

G.O(2D).No.15, Dated:26.07.2021- 2020-2021ஆம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பெண் சான்றிதழில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி என அச்சிட்டு வழங்கப்படும் என்று அரசாணை வெளியீடு!!!

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 25.022021 அன்று சட்டமன்றப் பேரவையில், சட்டமன்ற பேரவை விதி 110-ன் கீழ், வெளியிட்ட அறிவிப்பினை செயல்படுத்தும் பொருட்டு பள்ளிக்கலவி இயக்குநரின் பரிந்துரையின் அடிப்படையில், தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக ஏற்பட்ட அசாதாரண நிலையை கருத்தில் கொண்டும், பெற்றோர்களின் கோரிக்கைகள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துக்களை பரிசீலித்தும் மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டும். 2020-21ஆம் கல்வியாண்டில் தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அனைத்து அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள் மற்றும் சுயநிதிப் பள்ளிகளில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் அனைவரும் முழு ஆண்டுத் தேர்வு மற்றும் 10, 11ஆம் வகுப்புகளில் பயிலும் மாணாக்கர்கள் அனைவரும் பொதுத்தேர்வுகள் ஏதுமின்றி தேர்ச்சி பெறுகின்றனர் எனவும், இவர்களில் பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு பயின்று வருபவர்களின் பெயர்ப்பட்டியல் (Nominal Roll), சார்ந்த பள்ளிகளிலிருந்து பெறப்பட்டதன் அடிப்படையில், அவர்கள் தேர்ச்சி பெற்றதற்கான உரிய பதிவுகளுடன் கூடிய சான்றிதழை வழங்குமாறு அரசுத் தேர்வுகள் துறை இயக்குநருக்கு அறிவுரை வழங்கியும் மேலே முதலாவதாகப் படிக்கப்பட்ட அரசாணையில் ஆணை வெளியிடப்பட்டது.

இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..

For Whatsapp Group

For Telegram Group

No comments:

Post a Comment