_*நம்மைக் காக்கும் 48 திட்டம் - சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க "நம்மைக் காக்கும் 48" என்ற புதிய திட்டத்தினைச் செயல்படுத்தி அரசாணை வெளியீடு - அரசாணை (நிலை) எண். 564, நாள்: 17.12.2021!!!*_ - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Wednesday, December 22, 2021

_*நம்மைக் காக்கும் 48 திட்டம் - சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க "நம்மைக் காக்கும் 48" என்ற புதிய திட்டத்தினைச் செயல்படுத்தி அரசாணை வெளியீடு - அரசாணை (நிலை) எண். 564, நாள்: 17.12.2021!!!*_

நம்மைக் காக்கும் 48 திட்டம் - சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க "நம்மைக் காக்கும் 48" என்ற புதிய திட்டத்தினைச் செயல்படுத்தி அரசாணை வெளியீடு - அரசாணை (நிலை) எண். 564, நாள்: 17.12.2021


தமிழ்நாடு அரசு அனைத்து மக்களின் நலனை மேம்படுத்தும் நோக்குடன். ஒருங்கிணைந்த முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலமாக இலவா மருத்துவச் சேவைகளை செயல்படுத்தி வருகிறது. 2. மேலே படிக்கப்பட்ட கடிதத்தில், தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குநர்

பின்வருமாறு தெரிவித்துள்ளார்:

* "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் 18-11-2021

அன்று தலைமைரி செயலகத்தில், சாலைப் பாதுகாப்பு குறித்தும், சாலை

விபத்துக்களைக் குறைப்பதற்கும் சாலை உயிரிழப்புகளைத் தடுப்பதற்கும்.

தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் முன்னெடுப்பு நடவடிக்கைகள் குறித்து,

ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

* அதிக எண்ணிக்கையில் சாலை விபத்துகள் ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும், சாலைகளின் வடிவமைப்பு குறித்தும், காவல்துறை உள்ளிட்ட பொதுமக்களுக்கு முதலுதவி பயிற்சி அளிப்பது, சாலை விபத்துகள் குறித்து சிறப்பு சட்டங்கள் இயற்றுவது. புதிய தொழில் நுட்பங்கள் செயல்படுத்துவது குறித்தும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் விரிவாக இக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொண்டு, அடிக்கடி விபத்து நடக்கும் இடங்களைக் கண்டறிந்து ஆய்வுசெய்து, விபத்துகளைத் தடுப்பதற்கு

நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென்று அறிவுறுத்தினார். மேலும், சாகைச் விபத்தாங் பாதிக்கப்பட்டவர்களுக்கு, முதல் 48 மணிநேரத்திற்கான அவசர மருத்துவ சிகிச்சை செலவைத் தமிழ்நாடு அரசே மேற்கொள்ளும் வகையில், "நம்மைக் காக்கும் 48* - அனைவருக்கும் முதல் - 48 மணி நேர அவசர உயிர் காக்கும் உயர் சிகிச்சைக்கான கட்டணமில்லா மருத்துவ உதவித் திட்டத்தினைச் செயல்படுத்த ஆணையிட்டுள்ளார்கள்!


இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..


No comments:

Post a Comment