மத்திய அரசுப் பணியில் உள்ள மாற்றுத்திறனாளி, கர்ப்பிணி ஊழியர்கள் அலுவலகம் வருவதில் இருந்து விலக்கு
மத்திய அரசுப் பணியில் உள்ள மாற்றுத்திறனாளி, கர்ப்பிணி ஊழியர்கள் அலுவலகம் வருவதில் இருந்து விலக்கு
கொரோனா அதிகரிக்கும் நிலையில் மத்திய அரசுப் பணியில் உள்ள மாற்றுத்திறனாளி மற்றும் கர்ப்பிணி ஊழியர்கள் அலுவலகம் வருவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஜன.31-ம் தேதி வரை மத்திய அரசின் மாற்றுத்திறனாளி மற்றும் கர்ப்பிணி ஊழியர்கள் பணி நேரத்தில் வீட்டில் இருந்து வேலை செய்ய தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 5 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் கொரானாவிற்கு சிகிக்சை பெற்று வரும் நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருகின்றனர்.
ஏற்கனவே மத்திய அரசு ஊழியர்கள் 50% பேர் வீடுகளிலிருந்து பணிபுரிய உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் தற்பொழுது கொரோனா பரவல் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் மாற்றுத்திறனாளி மற்றும் கர்ப்பிணி ஊழியர்கள் அலுவலகம் செல்வதில் இருந்து விளக்கு அளிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பணியாளர் மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ள விதிமுறைகள் குறித்து விரிவாக இன்றைய தினம் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் கட்டுப்பாட்டு மண்டல பகுதியை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கும் இந்த விளக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக துணை செயலாளர்கள் அந்தஸ்திற்கு கீழ் உள்ள அரசு ஊழியர்களில் 50% பேர் மட்டும் பணிக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 50% பேர் தங்களுடைய வீடுகளில் இருந்து பணிபுரிய வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இது சுழற்சி முறையில் தான் அமல்படுத்தப்படுவதாகவும் வரும் ஜன.31-ம் தேதி இது முழுமையான அமலில் இருக்கும் எனவும் தேவைக்கு ஏற்ப இந்த விதிமுறைகளில் மாற்றம் செய்யப்படும்.
அதுவரை மாற்றுத்திறனாளி மற்றும் கர்ப்பிணி ஊழியர்கள் தங்களுடைய வீடுகளில் இருந்து பணிபுரிய வேண்டும் எனவும் மேலும் அவர்கள் தங்களுடைய தொலைபேசி மூலம் தொடர்ந்து தொடர்பில் இருக்க வேண்டும் மற்றும் மத்திய அரசு சார்பில் நடைபெறும் கூட்டங்களில் காணொளி வாயிலாக அவர்கள் கட்டாயமாக கலந்து கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தும் அவர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்தும் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தன்னுடைய அறிவிப்பில் விரிவாக விவரித்துள்ளார்.
இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..
No comments:
Post a Comment