_*10ம் மற்றும் 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 19ம் தேதி வெளியீடு - அரசுத் தேர்வுகள் இயக்ககம்*_ - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Monday, May 15, 2023

_*10ம் மற்றும் 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 19ம் தேதி வெளியீடு - அரசுத் தேர்வுகள் இயக்ககம்*_

10ம் மற்றும் 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வரும் 19ம் தேதி வெளியீடு - அரசுத் தேர்வுகள் இயக்ககம்

கடந்த மார்ச்/ஏப்ரல் மாதம் நடைபெற்ற 2022-2023-ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்னாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 19.05.2023 (வெள்ளிக்கிழமை) அன்று பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள டாக்டர். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தின் முதல் தளத்தில் வெளியிடப்படப்படவுள்ளது.

பத்தாம் வகுப்பிற்கான தேர்வு முடிவுகள் 19.05.2023 (வெள்ளிக்கிழமை) காலை 10.00 மணிக்கு வெளியாகும் எனவும் பதினொன்னாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு முடிவுகள் அதே நாளில் பிற்பகல் 2.00 மணிக்கு வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் www.tnresults.nic.in www.dge.tn.gov.in இணையதள முகவரியை பயன்படுத்தி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் மேற்கண்டுள்ள இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் எனவும் பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment