_*G.O 41 - அரசு ஊழியர்கள் துறை தேர்வு தேர்ச்சி பெறுவதிலிருந்து விலக்கு - புதிய விதிமுறைகள் - அரசாணை வெளியீடு*_ - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Sunday, May 14, 2023

_*G.O 41 - அரசு ஊழியர்கள் துறை தேர்வு தேர்ச்சி பெறுவதிலிருந்து விலக்கு - புதிய விதிமுறைகள் - அரசாணை வெளியீடு*_

G.O 41 - அரசு ஊழியர்கள் துறை தேர்வு தேர்ச்சி பெறுவதிலிருந்து விலக்கு - புதிய விதிமுறைகள் - அரசாணை வெளியீடு

"சிறப்பு மற்றும் துறைத் தேர்வுகளில் ஒரு அரசு அலுவலர் தேர்ச்சி பெறுவதிலிருந்து விலக்களிக்க அவர் பொருட்டு விதிகளைத் தளர்த்த கீழ்க்கண்ட நிபந்தனைகளை அவர் பூர்த்தி செய்ய வேண்டும்.

சம்பந்தப்பட்ட அரசு அலுவலர் 55 வயதிற்குக் குறையாதவராக  இருக்க வேண்டும்



ii. தொடர்புடைய அரசு அலுவலர் தேர்வுகளில் தேர்ச்சி பெற குறைந்தது ஐந்து தடவைகளாவது முயற்சி செய்திருக்க வேண்டும். இதற்கு அத்தாட்சியாக, தொடர்புடைய துறை / சிறப்பு தேர்வினை ஐந்து தடவைகள் தேர்வு மையத்திற்கு வந்து தேர்வுகள் எழுதியதற்கான விண்ணப்பதாரரின் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டுடன் (Hall tickets) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிடும் மேற்படி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் தேராதவர்கள் ஆகிய விவரப்பட்டியல் (Detailed Results) அடங்கிய அரசுப் பணியாளர் தேர்வாணையச் செய்தி வெளியீட்டை (Tamil Nadu Public Service Commission Bulletin) வைத்து அனுப்ப வேண்டும்.



iii. சம்பந்தப்பட்ட அரசு அலுவலர் இந்த சலுகையை அடையத்தக்க அளவிற்கு அவருடைய பணிக்குறிப்புகள் மனநிறைவு அளிப்பதாக இருக்க வேண்டும்.


3. மேலே பத்தி 2ல் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை, சிறப்பு மற்றும் துறைத் தேர்வுகளில் தேர்ச்சி பெறுவதிலிருந்து விதிவிலக்கு அளிக்க விதிகளை தளர்த்தக் கோரும் கோரிக்கைகளை பரிந்துரை செய்யும்போது கருத்தில் கொள்ளுமாறு அனைத்துத் தலைமைச் செயலகத் துறைகள் மற்றும் துறைத் தலைமைகள் கேட்டுக்கொள்ளப்படுகின்றன.



No comments:

Post a Comment