10-ம் வகுப்பு முடித்து, 11-ம் வகுப்பில் பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு!!! - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Monday, October 4, 2021

10-ம் வகுப்பு முடித்து, 11-ம் வகுப்பில் பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு!!!

10-ம் வகுப்பு முடித்து, 11-ம் வகுப்பில் பயிலும் மாணவர்கள் கவனத்திற்கு!!
10 Student Employment Registration




பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் கல்வி தகுதியினை தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக tnvelaivaaippu.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்து அடையாள அட்டை பெற்று கொள்ளலாம் என்று தமிழக அரசு கூறியுள்ளது. 

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதியினை தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக இத்துறையின் இணையதளமான https://tnvelaivaaippu.gov.in ல் பதிவு செய்து அடையாள அட்டை பெற தமிழக அரசால் உரிய வழிவகை செய்யப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரியாது இத்துறையின் இணையதளம் வாயிலாக பதிவு செய்து கொள்ள வசதி ஏற்படுத்தியமையால். மாணவர்களுக்கு ஏற்படும் போக்குவரத்துச் செலவு. காலவிரயம். தேவையற்ற அலைச்சல்கள் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல்கள் ஆகியவை தவிர்க்கப்படுகிறது. 

இதனைக் கருத்தில் கொண்டு தற்போது 2020-2021-ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் 04.10.2021 அன்று வழங்கப்பட உள்ளதை அடுத்து 04.10.2021 முதல் 18.10.2021 வரை 15 நாட்களுக்கு ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி அவர்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப் பணி நடைபெற சிறப்பு நடவடிக்கைகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் இவ்வசதியினை பயன்படுத்தி மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவுகள் மேற்கொள்ளலாம்.

மேலும் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதியை வேலைவாய்ப்புத் துறையின் இணையதளத்தில் https://tnvelaivaaippu.gov.inல் தங்கள் அளவிலேயே online-ல் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்படுகிறது. 

எனவே, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகி பதிவுகள் மேற்கொள்ளலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், மேற்படி பதிவுகள் மேற்கோள்ளும் போது அரசு விதித்துள்ள கொரோனா வழிமுறைகளான, சமூக இடைவெளி பின்பற்றுதல், முக கவசம் அணிதல், அவ்வப்போது கைகளை சோப்பினால் 

கழுவுதல் மற்றும் கிருமி நாசினி பயன்படுத்திட அறிவுறுத்தல் போன்றவைகளை அத்தியாவசியம் கடைபிடித்து செயல்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இத்தகவலை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநர் திரு. கொ. வீர ராகவ ராவ். இ.ஆப அவர்கள் தெரிவித்தார்கள்.

இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..

For Whatsapp Group

For Telegram Group

No comments:

Post a Comment