*பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தில் (TNPESU) வேலை வாய்ப்பு*!!! - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Wednesday, October 20, 2021

*பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தில் (TNPESU) வேலை வாய்ப்பு*!!!

*பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு ரூ.25 ஆயிரம் ஊதியத்தில் தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தில் (TNPESU) வேலை வாய்ப்பு!!!*

தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தில் (TNPESU) காலியாக உள்ள Assistant System Analyst பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  

பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இதற்கு ரூ.25 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகம் (TNPESU)

மேலாண்மை : தமிழக அரசு

பணி : Assistant System Analyst

கல்வித் தகுதி :

அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் B.E, B.Tech, MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், பணியில் முன் அனுபவம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.25,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : 

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து, அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 

27.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது, ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500.

இதர விண்ணப்பதாரர்களுக்கு ரூ.250

தேர்வு முறை : 

விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வு மூலமாக இப்பணியிடத்திற்கு தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்  அல்லது கீழே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..

For Whatsapp Group

For Telegram Group

No comments:

Post a Comment