* 3, 5, 8 ஆம் வகுப்புமாணவர்களுக்கு WhatsApp மூலம் வினாடி வினா நடத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் ஆணை!!! * - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Thursday, October 7, 2021

* 3, 5, 8 ஆம் வகுப்புமாணவர்களுக்கு WhatsApp மூலம் வினாடி வினா நடத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் ஆணை!!! *

* 3, 5, 8 ஆம் வகுப்புமாணவர்களுக்கு  WhatsApp மூலம் வினாடி வினா நடத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் ஆணை!!! *

மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், கோவிட் 19 பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில், பள்ளி மாணவர்களின் கல்வியை உறுதி செய்யும் வகையில் பாடப்பகுதிகளை காணொலிகளாக மாற்றி, தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. மேலும், மாணவர்களுக்கு இணைப்பு பாடப்பொருள் தயாரித்தல், புத்தாக்க கையேடுகள் தயாரித்தல் போன்ற செயல்பாடுகளையும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டு, மாணவர்களின் கற்றல் தடைபடாமல் இருப்பதை உறுதி செய்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து, 3, 5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, கற்றல் விளைவுகளின் அடிப்படையில் வினாடி வினா தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

எனவே அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும், இந்த வினாடி வினா தொகுப்பினை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அனுப்பி வைத்து, அந்தந்தப் பாட ஆசிரியர்களை, மாணவர்களுக்கு whatsapp மூலமாக அனுப்பி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் வினாடி வினா குறித்த கலந்துரையாடல் நடத்தி அதன் மூலம் கற்றல் ஐயங்களை தெளிவுபடுத்திட, ஆசிரியர்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்குமாறு அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுரை வழங்குமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறார்கள்.


இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..

For Whatsapp Group

For Telegram Group

No comments:

Post a Comment