*9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகத்தில் மாநில அளவிலான மதிப்பீட்டுத் தேர்வு நடத்துதல் சார்ந்து பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறை!!! * - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Thursday, October 7, 2021

*9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகத்தில் மாநில அளவிலான மதிப்பீட்டுத் தேர்வு நடத்துதல் சார்ந்து பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறை!!! *

*9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகத்தில் மாநில அளவிலான மதிப்பீட்டுத் தேர்வு நடத்துதல் சார்ந்து பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறை!!! *

Covid-19 காரணமாக பெருந்தொற்று மாநில அளவில் பரவியுள்ள நிலையில் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியை குறைத்தல் சார்ந்து, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 9 முதல் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களின் கற்றலை மேம்படுத்தவும் புத்தாக்கப் பயிற்சி கட்டகம் தயாரிக்கப்பட்டு பள்ளியில் நடைமுறையில் உள்ளது.

முதல் கட்டமாக புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தில் 9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கும். 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், உயிரி தாவரவியல், விலங்கியல், உயிரி விலங்கியல், வரலாறு, பொருளியல், கணக்குப்பதிவியல், வணிகவியல், கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாடுகள் ஆகிய பாடங்களுக்கும் ஒவ்வொரு பாடத்திற்கும் பாட வாரியாக 60 கொள்குறி மதிப்பீட்டு வினாக்கள் தயார் செய்யப்பட்டுள்ளது.

இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையின்படி 9 முதல் 12-ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர்தொழில் நுட்ப ஆய்வகம் (HighTech Lab) மூலம் மதிப்பீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து தலைமை ஆசிரியர்களும் இந்த மதிப்பீட்டை 12.10.2021 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள் உயர்தொழில் நுட்ப ஆய்வகத்திலுள்ள (Hitech lab) கணினிகளின் எண்ணிக்கைக்கேற்ப ஒவ்வொரு குழுவினருக்கும் மாணவர் EMIS LOG IN மற்றும் PASSWORD ஆகியவற்றை பயன்படுத்தி ஒரு மணி நேரம் கால அவகாசம் அளித்து நடத்திட வேண்டும். மேலும், இச்செயல்பாட்டினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணித்திட அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் ஒவ்வொரு குழு மாணவர்களுக்கான மதிப்பீடு முடிந்த பின்னர் உடனுக்குடன் அடுத்தடுத்த குழு மாணவர்களை அமரவைத்து அனைத்து மாணவர்களும் இணைப்பிலுள்ள அட்டவணையின்படி அனைத்து அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களும் செயல்படவும், ஆசிரியர்கள் இணையதள வசதி உள்ள கணினிகளைப் பயன்படுத்தியும் இம்மதிப்பீட்டுச் செயலை சிறப்பாக நடத்தி முடித்தல் சார்ந்து உரிய அறிவுரைகளை அனைத்து அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.






இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..

For Whatsapp Group

For Telegram Group

No comments:

Post a Comment