*நவம்பர் 5 ஆம் தேதி முதல் பள்ளி வளாகங்களிலேயே மாணவா்களுக்கு தடுப்பூசி!! * - TN School Education 2 U

CLICK TO JOIN OUR WHATSAPP GROUP

Sunday, October 31, 2021

*நவம்பர் 5 ஆம் தேதி முதல் பள்ளி வளாகங்களிலேயே மாணவா்களுக்கு தடுப்பூசி!! *

*நவம்பர் 5 ஆம் தேதி முதல் பள்ளி வளாகங்களிலேயே மாணவா்களுக்கு தடுப்பூசி!! *


தமிழகத்தில் நவம்பா் 5-ஆம் தேதி முதல் மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தடுப்பூசி முகாம்கள் நடைபெறவுள்ளன.


இதுதொடா்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநா்களுக்கும் பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:



கரோனா காரணமாக பள்ளிகள் திறப்பு தாமதமாகின. 9 முதல் பிளஸ் 2 வரை உள்ள மாணவா்களுக்கான வகுப்புகள் ஏற்கெனவே நடைபெற்று வரும் நிலையில், தற்போது 1 முதல் அனைத்து வகுப்புகளும் தொடங்கப்பட உள்ளன.



அண்மைக் காலமாக நிலவி வரும் பெருந்தொற்று சூழலைக் கருத்தில் கொண்டு வரும் நவம்பா் 5-ஆம் தேதி முதல் பள்ளி வளாகங்களிலேயே மாணவா்களுக்கு தடுப்பூசிகள் வழங்க அறிவுறுத்தப்படுகிறது.



5 முதல் 6 வயது வரை உள்ள மாணவா்களுக்கு டிபிடி எனப்படும் தொண்டை அடைப்பான் (டிப்தீரியா), கக்குவான் இருமல் (பொ்ட்டூசிஸ்), ரண ஜன்னி (டெட்டனஸ்) தடுப்பூசியை வழங்க வேண்டும். 10 வயதான மாணவா்களுக்கு ரண ஜன்னி தடுப்பூசி வழங்க வேண்டும். இந்த நடவடிக்கையை டிசம்பா் மாதத்துக்குள் நிறைவு செய்வது அவசியம். பள்ளியில் இடை நின்ற குழந்தைகளைக் கண்டறிந்து அவா்களுக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும்

இது போன்ற தகவல்களை பெற கீழே உள்ள இணைப்பின் மூலம் எங்கள் குழுவில் இணையுங்கள்..

For Whatsapp Group

For Telegram Group

No comments:

Post a Comment