இடைநிலை ஆசிரியர்களுக்கான தனி ஊதியம் 750 சார்ந்த விளக்க கடிதங்கள் personal pay Rs. 750/-
தற்போது ரூபாய் 2800 - தர ஊதியம் பெற்றுவரும் இடைநிலை ஆசிரியர்களுக்கு தேர்வுநிலை - சிறப்பு நிலை வருங்காலங்களில் பெற்றாலும் பதவி உயர்வு இல்லையெனில் தர ஊதியம் ஊதியக்கட்டு 5200 50200 + 2800ல் மாற்றம் வராது அவர்களுக்கு 750 தனி ஊதியம் தொடர்ந்து வழங்கலாம் என சென்னை கருவூல இயக்குநர் விளக்கக்கடிதம்.
ஊதியக் குழு பரிந்துரைகளின் பேரில் வெளியிடப்பட்ட அரசாணையில் 1.1.06க்குப் பிறகு தேர்வு மற்றும் சிறப்பு நிலை பெறுபவர்களுக்கு அவர்கள் உள்ள நிலையில் 1 ஊதிய உயர்வு மட்டும் வழங்கி அவர்களின் தரஊதியம் மாற்றம் இல்லை என தெளிவாக அரசு ஆணைகள் வழங்கியுள்ளது,
மேலும் ரூ.5200- 20200 ஊதியக் கட்டில் ரூ.2800 தரஊதியம் பெறும் சாதாரணநிலை இடைநிலை ஆசிரியர்களுக்கும். இடைநிலை ஆசிரியர் தரத்தில் சாதாரண நிலையில் உள்ள பிறவகை ஆசிரியர் பணியிடங்களுக்கும் ரூ.750/- தனி ஊதியம் வழங்கி ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறே ரூ. 3900 34800 + தர ஊதியம் ரூ. 4600 பெறும் சாதாரண நிலையில் உள்ள உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் ரூ. 750/- தனி ஊதியம் வழங்க ஆணைகள் உள்ளது. தற்போது தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலையில் உள்ள முறையே ரூ.9300 - 34800 + தரஊதியம் ரூ. 4300 மற்றும் ரூ. 4500 பெறும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் தேர்வுநிலை மற்றும் சிறப்பு நிலையில் பணியாற்றும் உயர்நிலைப் பள்ளி தலைமை
ஆசிரியர்களுக்கு தற்போது அனுமதிக்கப்பட்டு வரும் சிறப்புப்படியான ரூ.500/- தொடர்ந்து பெற அனுமதித்து அரசு ஆணையிட்டுள்ளது. எனவே அரசு தெளிவாக ரூ. 5200 - 20200 + தரஊதியம் ரூ. 2800 பெறும் ஆசிரியர்களுக்கு ரூ. 750/- தனி ஊதியம் வழங்க அரசு ஆணையிட்டுள்ள நிலையில் அரசிடம் இருந்து தனியாக தெளிவுரைகள் பெற அவசியம் இல்லை எனக் கருதப்படுகிறது.
No comments:
Post a Comment